நேபாளத்தில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒருங்கிணைப்பு

நேபாளத்தின் ஐக்கிய மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஎன்-யுஎம்எல்), நேபாள மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய இரு கட்சிகளும் ஒருங்கிணைக்கப்பட்டு, 'நேபாள கம்யூனிஸ்ட் கட்சி' (சிபிஎன்) என்ற
நேபாளத்தில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒருங்கிணைப்பு

நேபாளத்தின் ஐக்கிய மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஎன்-யுஎம்எல்), நேபாள மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய இரு கட்சிகளும் ஒருங்கிணைக்கப்பட்டு, 'நேபாள கம்யூனிஸ்ட் கட்சி' (சிபிஎன்) என்ற புதிய கட்சி உருவாக்கப்படவுள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
சிபிஎன்-யுஎம்எல், மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், தலைநகர் காத்மாண்டுவிலுள்ள பாலுவாடார் பகுதியில் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், இரு கட்சிகளையும் இணைப்பதற்கான உடன்பாடு ஏற்பட்டது. மேலும், கட்சி இணைப்புக்கான 7 அம்ச திட்டங்களும் அறிவிக்கப்பட்டன. சிபிஎன்-யுஎம்எல் மற்றும் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து உருவாக்கப்படும் புதிய கட்சிக்கு நேபாள காங்கிரஸ் கட்சி என்று பெயரிடப்பட்டது.
அப்போது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, தற்போதைய மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய அரசில் இணையும் என்று கட்சி ஒருங்கணைப்புக் குழு உறுப்பினர் நாராயண் காஜி ஷ்ரெஷ்தா தெரிவித்தார். அடுத்தக் கட்டமாக, புதிதாகச் சேரும் கட்சி உறுப்பினர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கித் தருவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில், பிரதமர் கே.பி. சர்மா ஒலியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான பிரசண்டாவும் புதிதாக உருவாகவிருக்கும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் சம அதிகாரம் கொண்ட தலைவர்களாக இருப்பார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டின் அக்டோபர் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில், யாரும் எதிர்பாராவிதமாக சிபிஎன்-யுஎம்எல் கட்சியும் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தன. அந்தத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற அந்தக் கூட்டணி, நேபாள காங்கிரஸ் கட்சியை படுதோல்வியடையச் செய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com