தற்காப்புக்காக்காக பள்ளி ஆசிரியர்களுக்கு துப்பாக்கி: அதிபர் ட்ரம்ப்பின் ஆலோசனையால் சர்ச்சை! 

பள்ளிகளில் நிகழும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களை சமாளிக்க தற்காப்புக்காக பள்ளி ஆசிரியர்களுக்கு துப்பாக்கி அளிக்கலாம், என்ற அதிபர் ட்ரம்ப்பின் ஆலோசனையால் சர்ச்சை எழுந்துள்ளது.  
தற்காப்புக்காக்காக பள்ளி ஆசிரியர்களுக்கு துப்பாக்கி: அதிபர் ட்ரம்ப்பின் ஆலோசனையால் சர்ச்சை! 

நியூயார்க்: பள்ளிகளில் நிகழும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களை சமாளிக்க தற்காப்புக்காக பள்ளி ஆசிரியர்களுக்கு துப்பாக்கி அளிக்கலாம், என்ற அதிபர் ட்ரம்ப்பின் ஆலோசனையால் சர்ச்சை எழுந்துள்ளது.  

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பள்ளி ஒன்றில் கடந்த சில நாட்களுக்கு முன் துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் மாணவர்கள் உட்பட 17 பேர் பலியாயினர். இது தொடர்பாக பள்ளியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் மாணவன் ஒருவனை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்கப் பள்ளிகளில் தொடரும் துப்பாக்கி சூடு சம்பவங்களைக் கண்டித்து பெற்றோர்கள், மாணவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். துப்பாக்கி விற்பனை மற்றும் பரவலகத்திற்கு கடும் கட்டுப்பாடுகள் கொண்டு வர வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த போராட்டங்களின் விளைவாக தானியங்கி துப்பாக்கியின் செயல்திறன் மேம்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் ‘பம்ப் ஸ்டாக்ஸ்’ என்ற உதிரி பாகத்துக்கு, அமெரிக்காவில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் தடை விதித்தார்.

இந்நிலையில் பள்ளி துப்பாக்கிச் சூட்டை தடுக்க, பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு துப்பாக்கிகள் வழங்க வேண்டும் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்ரம்ப் கூறும்போது, "நீங்கள் துப்பாக்கி வைத்திருக்கும், அதனைத் திறமையாக  கையாளத் தெரிந்த திறமையான ஆசிரியராக இருந்தால், உங்களால் தாக்குதலை விரைவாக தடுக்க முடியும். பள்ளிகளில் 20% ஆசிரியர்களாவது துப்பாக்கிச் சுடுதலில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் " என்று தெரிவித்துள்ளார்.

அவரது இந்த கருத்து தற்பொழுது சர்ச்சைக்குரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com