சீர்திருத்த நடவடிக்கைகளால் இந்தியாவின் பொருளாதாரம் சரிவு: அமெரிக்கா கருத்து

சரக்கு-சேவை வரி அமலாக்கம், ரூபாய் நோட்டு வாபஸ் போன்ற பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளால் இந்தியாவின் பொருளாதாரம் சரிவடைந்ததாக அமெரிக்கா கூறியுள்ளது.

சரக்கு-சேவை வரி அமலாக்கம், ரூபாய் நோட்டு வாபஸ் போன்ற பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளால் இந்தியாவின் பொருளாதாரம் சரிவடைந்ததாக அமெரிக்கா கூறியுள்ளது.
இதுதொடர்பாக, அமெரிக்கா வெளியிட்டுள்ள பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த ஆண்டில் அமெரிக்காவுடன் இந்தியா, பிரேசில் உள்ளிட்ட 4 நாடுகள் மேற்கொண்ட வர்த்தக நடவடிக்கைகள் முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் குறைந்து காணப்பட்டது.
இந்தியாவில் 90 சதவீத பணப் பரிவர்த்தனைகள் ரொக்கமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், புழக்கத்தில் இருந்த உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று இந்திய அரசு கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அறிவித்தது. இதனால், புழக்கத்தில் இருந்த 86 சதவீத ரொக்கப் பணம் ஒரே நாளில் செல்லாதவையாகின.
அதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜூலை மாதம், பல்வேறு வரி விதிப்பு முறைகளுக்கு மாற்றாக, ஒரே சீரான வரி விதிப்பு முறை (சரக்கு-சேவை வரி, ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டது. இது, பொருளாதாரத்தில் குறுகிய கால நிலையற்ற தன்மையை ஏற்படுத்தியது. இந்திய பொதுத் துறை வங்கிகளில் வாராக் கடன் விகிதம் அதிகரித்துள்ளது.
கடந்த 2014-15-ஆம் நிதியாண்டைக் காட்டிலும், வாராக் கடன் விகிதம் தற்போது இரு மடங்காக அதிகரித்துள்ளது. இது, வங்கிகளின் செயல்பாடுகளுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
2018-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வாராக் கடன் விகிதம் 10.8 சதவீதமாகவும், செப்டம்பர் 2018 வரையிலான காலாண்டில் 11.1 சதவீதமாகவும் அதிகரிக்கும் என்று இந்திய ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.
எனினும், பொதுத் துறை வங்கிகளுக்கு மூலதன நிதியாக, 3,240 கோடி டாலர் வழங்குவதாக மத்திய அரசு அண்மையில் அறிவித்துள்ளது. இதனால், எதிர்காலத்தில் நெருக்கடியில் இருந்து வங்கிகள் மீண்டு வர வாய்ப்புள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com