உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம்: இந்தியாவுக்கு மாலத்தீவு எச்சரிக்கை

உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று இந்தியாவுக்கு மாலத்தீவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று இந்தியாவுக்கு மாலத்தீவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து மாலத்தீவு வெளியுறவுத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை இரவு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
உண்மைகள், கள நிலவரங்கள் ஆகியவற்றை நிராகரித்து விட்டு, இந்திய அரசால் மாலத்தீவு விவகாரம் குறித்து வெளிப்படையாக கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அதிபர் அப்துல்லா யாமீன் அரசு தனது கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது.
மாலத்தீவில் 30 நாள்கள், அவசர நிலை நீட்டிக்கப்பட்டிருப்பதை அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான செயல் என்று இந்தியா தெரிவித்திருப்பது, எங்கள் நாட்டு அரசியலமைப்புச் சட்டம் மற்றும் பிற சட்டங்களுக்கு எதிரானதாகும். மாலத்தீவு தனது வரலாற்றில் மிகவும் பிரச்னைக்குரிய காலக்கட்டத்தில் தற்போது உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதேநேரத்தில், இந்தியா உள்ளிட்ட நட்புறவு நாடுகளும், கூட்டாளி நாடுகளும், எங்கள் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை தவிர்க்க வேண்டும். அப்படி தலையிட்டால், மாலத்தீவில் நிலவும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் தெரிவித்திருக்கும் கவலைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக, அந்த நாடுகளுடன் இணைந்து செயல்படுவதில் மாலத்தீவு உறுதிபூண்டுள்ளது என்பதை மீண்டும் தெரிவித்து கொள்கிறோம் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com