ஆஸ்திரேலியாவில் கடும் வெப்பம்: அரிய வகை வௌவால்கள் மூளை வெடித்துச் சாவு

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள கடும் வெப்பம் காரணமாக அங்குள்ள அரிய வகை வௌவால்கள் மூளை வெடித்து உயிரிழந்து வருகிறது.
ஆஸ்திரேலியாவில் கடும் வெப்பம்: அரிய வகை வௌவால்கள் மூளை வெடித்துச் சாவு

ஆஸ்திரேலியாவில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. சமீபத்தில் அங்கு அதிகபட்சமாக 45 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.

இதன்காரணமாக ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மேற்கு திசையில் உள்ள கேம்பல்டௌன் என்ற புறநகர் பகுதியில் நூற்றுக்கணக்கான வௌவால்கள் மூளை வெடித்து உயிரிழக்கும் கோரச் சம்பவம் நிலவி வருகிறது.

இதுகுறித்து உள்ளூர்வாசி ஒருவர் கூறுகையில்,

இங்கு கடந்த சில தினங்களாக தொடர்ந்து கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இதனால் இங்குள்ள வௌவால்கள், நூற்றுக்கணக்கில் உயிரிழந்து வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இவை அனைத்தும் இங்கு வசிக்கும் அரிய வகை ஃப்ளையிங் ஃபாக்ஸ் என்ற இன வௌவால்கள் ஆகும்.

இதனை தடுக்கும் வகையில் நியூ சௌத் வேல்ஸ் வனச்சரக பாதுகாப்பு அமைப்பு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக வெப்பத்தின் கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ள மிருகங்களுக்கு சிகிச்சை அளிக்கும் நடவடிக்கையில் துரிதமாக ஈடுபட்டு வருகிறது.

இருப்பினும், அதிக வெப்பத்தை தாங்க முடியாமல் இந்த அரிய வகை வௌவால்களின் மூளை வெடித்துச்சிதறி உயிரிழந்துவிடுகிறது. இதனை தடுக்கும் நோக்கத்தில் தன்னார்வ அமைப்புகளிடம் தொடர்ந்து கூட்டமைத்து வனங்களைப் பாதுகாத்து வருகிறது. மேலும் வௌவால்கள் ஆயிரக்கணக்கில் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

முன்னதாக, 1939-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் 47.3 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானதே அங்கு இதுவரை அதிகபட்சமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com