2 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது சீனா

சீனா, இரண்டு வழிகாட்டு செயற்கைக்கோள்களை வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது
2 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது சீனா

சீனா, இரண்டு வழிகாட்டு செயற்கைக்கோள்களை வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
இதுகுறித்து விண்வெளி ஆராய்ச்சித் துறை அதிகாரியான யாங் ஸங்ஃபெங் கூறியதாவது:
பெய்டோ-3 வகையைச் சேர்ந்த இரண்டு வழிகாட்டு செயற்கைக்கோள்கள் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஜிசங் செயற்கைகோள் ஏவுதள மையத்திலிருந்து வெள்ளிக்கிழமை காலை 7.18 மணிக்கு (உள்ளூர் நேரம்) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. 2018-ஆம் ஆண்டில் பெய்டோ ரக செயற்கைக்கோள்கள் ஏவப்படுவது இதுவே முதல் முறை. நடப்பு ஆண்டில் மட்டும் பெய்டோ-3 வகையைச் சேர்ந்த 18 செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com