ஈரான் அணுசக்தி ஒப்பந்தம்: அமெரிக்கப் பொருளாதாரத் தடைகள் "கடைசி முறையாக' நிறுத்திவைப்பு

ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தின் அடிப்படையில், அந்த நாடு மீதான பொருளாதாரத் தடைகளை தொடர்ந்து நிறுத்திவைக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டது.
ஈரான் அணுசக்தி ஒப்பந்தம்: அமெரிக்கப் பொருளாதாரத் தடைகள் "கடைசி முறையாக' நிறுத்திவைப்பு

ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தின் அடிப்படையில், அந்த நாடு மீதான பொருளாதாரத் தடைகளை தொடர்ந்து நிறுத்திவைக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டது.
எனினும், அந்த ஒப்பந்தத்தில் உள்ள தவறுகள் திருத்தப்படாவிட்டால், ஈரான் மீதான பொருளாதாரத் தடையை நிறுத்திவைப்பது இதுவே "கடைசி முறை'யாக இருக்கும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அதிபர் மாளிகையில் டிரம்ப் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஈரானின் அணு ஆயுதத் திட்டங்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் நிறுத்திவைக்கப்படுகின்றன.
எனினும், இன்னும் 120 நாள்களுக்குள் அந்த நாட்டுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் உள்ள குறைகளைக் களையும் வகையிலான மாற்றங்களைச் செய்வதற்கு ஐரோப்பிய நாடுகளுடன் உடன்பாடு எட்டப்படாவிட்டால், பொருளாதாரத் தடைகளை நிறுத்திவைப்பது இதுவே கடைசி முறையாக இருக்கும். ஈரான் அணுசக்தித் திட்டத்தை நான் கடுமையாக எதிர்த்து வந்தாலும், அந்தத் திட்டத்திலிருந்து அமெரிக்கா இதுவரை பின்வாங்கவில்லை. அந்த ஒப்பத்தில் உள்ள குறைபாடுகள் களையப்பட வேண்டும்; அல்லது ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகிவிடும் என்பதே என் உறுதியான நிலைப்பாடு ஆகும் என்று தனது அறிக்கையில் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தனது அணுசக்தித் திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்ய ஈரானும், அதற்குப் பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொள்ள வல்லரசு நாடுகளும் ஒப்புக் கொண்டு, இருதரப்பினருக்கும் இடையே ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் கடந்த 2015-ஆம் ஆண்டு மே மாதம் ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஒபாமா அதிபராக இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட கடுமையான முயற்சியின் பலனாக உருவான இந்த ஒப்பந்தம், அமெரிக்கா மேற்கொண்டதிலேயே மிகவும் மோசமான ஒப்பந்தம் என்று தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்து வருகிறார்.
மேலும், தான் ஆட்சிக்கு வந்தால் ஈரானுடான அணுசக்தித் திட்டத்தைக் கைவிடப்போவதாக அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது டிரம்ப் வாக்குறுதி அளித்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com