பருவநிலை மாற்ற விவகாரம்: இந்தியா, சீனாவுக்கு ஐ.நா. பாராட்டு

பருவநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டத்தில், இந்தியாவும், சீனாவும் உறுதியுடன், மற்ற நாடுகளுக்கு முன்மாதிரியாக செயல்படுவதாக ஐ.நா. பாராட்டு தெரிவித்துள்ளது.

பருவநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டத்தில், இந்தியாவும், சீனாவும் உறுதியுடன், மற்ற நாடுகளுக்கு முன்மாதிரியாக செயல்படுவதாக ஐ.நா. பாராட்டு தெரிவித்துள்ளது.
இந்தியா உள்பட வளரும் நாடுகளை உள்ளடக்கிய "ஜி77' கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை, ஈக்குவடார் நாட்டிடம் இருந்து எகிப்து ஏற்றுக் கொள்ளும் நிகழ்ச்சி, நியூயார்க்கில் உள்ள ஐ.நா. சபையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் பேசியதாவது:
பருவநிலை மாற்ற விவகாரத்தில், உலக நாடுகள் தோல்வியடைந்துவிடக் கூடாது. பருவநிலை மாற்றத்துக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெற வேண்டும். உலக அளவில் மாறி வரும் பருவ நிலையால், ஆப்பிரிக்க நாடுகள்தாம் அதிக பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. ஆப்பிரிக்க நாடுகள் வறட்சியாலும், சிறிய தீவுகள் புயல்-மழையாலும் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது.
இந்தியாவுக்கு பாராட்டு: பருவநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டத்தில், இரு பெரும் பொருளாதார நாடுகளான இந்தியாவும் சீனாவும் உறுதியுடன் செயலாற்றி வருகின்றன. மற்ற நாடுகளுக்கு முன்மாதிரியாக இவ்விரு நாடுகளும் உள்ளன என்றார் அவர்.
கடந்த 1964-ஆம் ஆண்டில் ஐ.நா.வால் நிறுவப்பட்ட "ஜி77' கூட்டமைப்பில், தற்போது இந்தியா, சீனா உள்பட 134 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. 
முன்னதாக, பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற பருவநிலை மாநாட்டில் புவி வெப்பயமாதலை குறைப்பது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் இந்தியாவும் இணைந்தது.
இதனிடையே, இந்தியா,சீனா போன்ற நாடுகளுக்கு இந்த ஒப்பந்தம் சாதகமாக இருப்பதாக குற்றம்சாட்டிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக கடந்த ஜூன் மாதம் அறிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com