ஆஸ்திரேலியக் கூட்டமைப்பில் இணைந்தது இந்தியா

சர்வதேச நாடுகளிடையே ஏற்றுமதி செய்யப்படும் பொருள்கள், ரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களை உருவாக்கப் பயன்படாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் ஆஸ்திரேலியக் கூட்டமைப்பில் (ஏஜி) இந்தியா 

சர்வதேச நாடுகளிடையே ஏற்றுமதி செய்யப்படும் பொருள்கள், ரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களை உருவாக்கப் பயன்படாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் ஆஸ்திரேலியக் கூட்டமைப்பில் (ஏஜி) இந்தியா வெள்ளிக்கிழமை முறைப்படி இணைந்தது.
இது தொடர்பாக அந்தக் கூட்டமைப்பு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
நடப்பு ஆண்டின் (2018) ஜனவரி 19 அன்று, ஆஸ்திரேலியக் கூட்டமைப்பில் இந்தியா 43ஆவது உறுப்பினராக முறைப்படி இணைந்தது. இந்தக் கூட்டமைப்பானது, ரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களை உருவாக்கப் பயன்படக் கூடிய பொருள்கள், சாதனங்கள், தொழில்நுட்பங்கள் ஆகியவை பரவுவதைத் தடுப்பதற்காகப் பணியாற்றும் நாடுகளின் தன்னார்வ மற்றும் ஒத்துழைப்பு அமைப்பாகும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பில் இந்தியா சேர்ந்துள்ளது குறித்து தில்லியில் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறுகையில் 'இந்த நடவடிக்கை பரஸ்பரம் பயனளிப்பதோடு ஆயுதங்கள் பரவுவதைத் தடுப்பதற்கும் உதவும். இந்தியாவின் நம்பகத்தன்மையை மேலும் அதிகரிக்க இந்த உறுப்பினர் பதவி உதவும்' என்றார்.
ஏற்கெனவே, ஆயுதங்களை உருவாக்கப் பயன்படும் பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கு கட்டுப்பாடுகளை விதிக்க வகைசெய்யும் வசேனார் அமைப்பிலும், எம்டிசிஆர் அமைப்பிலும் இந்தியா உறுப்பினராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com