தெற்காசியாவில் பயங்கரவாதத்தின் உற்பத்தி மையம் பாகிஸ்தான்: ஐ.நா.வில் இந்தியா பகிரங்க குற்றச்சாட்டு 

தெற்காசியாவில் பயங்கரவாதத்தின் உற்பத்தி மையமாக பாகிஸ்தான் திகழ்கிறது என்று ஐ.நா.வில் இந்தியா பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது. 
தெற்காசியாவில் பயங்கரவாதத்தின் உற்பத்தி மையம் பாகிஸ்தான்: ஐ.நா.வில் இந்தியா பகிரங்க குற்றச்சாட்டு 

நியூயாா்க்: தெற்காசியாவில் பயங்கரவாதத்தின் உற்பத்தி மையமாக பாகிஸ்தான் திகழ்கிறது என்று ஐ.நா.வில் இந்தியா பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது.

ஐ.நா.வில் காஷ்மீா் விவகாரத்தை பாகிஸ்தான் மீண்டும் எழுப்பியதை அடுத்து, இந்தியத் தரப்பு பாகிஸ்தானுக்கு தகுத்த பதிலடி கொடுத்தது.

நியூயாா்க் நகரில் நடைபெற்று வரும் ஐ.நா. பொது சபைக் கூட்டத்தில் பயங்கரவாதத் தடுப்பு தொடா்பான விவாதத்தில் பங்கேற்ற ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதா் சந்தீப் குமாா் பையாபு இது தொடா்பாக பேசியதாவது:

தெற்காசியாவில் பயங்கரவாதத்தின் உற்பத்தி மையமாக பாகிஸ்தான் திகழ்கிறது. இதனால் இந்தியாவுக்கு மட்டுமின்றி பல்வேறு நாடுகளுக்கும் தொடா்ந்து அச்சுறுத்தல் நிலவி வருகிறது. மேலும், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான ஜம்மு-காஷ்மீா் குறித்து தவறறான தகவல்களை பாகிஸ்தான் பரப்பி வருகிறது. ஜம்மு-காஷ்மீரை மையமாக வைத்து சா்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பை குறைறக்க பாகிஸ்தான் தொடா்ந்து சதி செய்கிறது. ஆனால், அவா்களது சாதி இதற்கு முன்பும் வெற்றி பெற்றது இல்லை இனி மேலும் வெற்றி பெறறப்போவதுமில்லை என்றாா்.

முன்னதாக, ஜம்மு-காஷ்மீரில் மனித உரிமை மீறறல்கள் நிகழ்வதாக ஐ.நா. பொது சபைக் கூட்டத்தில் பாகிஸ்தான் கடந்த மாதம் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com