ஃபோட்டோவுக்கு போஸ் கொடுக்கும் போது சுறாக்களிடம் சிக்கிய பிரபல இன்ஸ்டாகிராம் மாடல்!

பிரபல புகைப்பட வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் பிரபலங்கள் மற்றும் சாமானியர்கள் என அனைவரும் தத்தம்
ஃபோட்டோவுக்கு போஸ் கொடுக்கும் போது சுறாக்களிடம் சிக்கிய பிரபல இன்ஸ்டாகிராம் மாடல்!

பிரபல புகைப்பட வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் பிரபலங்கள் மற்றும் சாமானியர்கள் என அனைவரும் தத்தம் வாழ்வின் பொன்னான தருணங்களை பதிவிட்டு வருவது வழக்கம். அண்மையில் 19 வயது மாடலான காதரினா ஜரூட்ஸ்கி என்பவர் எடுக்க முயன்ற ஒரு ஃபோட்டோ அவரது உயிருக்கே ஆபத்தாக முடியவிருந்தது, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

கடந்த மாதம் பஹாமஸ் தீவுக்குச் சென்ற காதரினா கடலுக்கு அடியில் சுறா மீன்கள் நீந்துவதைப் பார்த்து அவற்றுடன் புகைப்படம் எடுக்க முடிவு செய்து நீரில் குதித்தார்.

ஃபோட்டோவுக்கு போஸ் கொடுக்க முயன்ற போது திடீரென்று அவரது கைகளை கடித்து அவரை நீருக்குள் இழுக்கத் தொடங்கியது சுறா மீன் ஒன்று.

நர்ஸ் ஷார்க் என்ற வகையைச் சேர்ந்த அந்தச் சுறா பொதுவாக ஆபத்து இல்லாததுதான். அது மனிதர்களை கொல்லாது. ஆனால் தனக்கு ஏதோ ஆபத்து என்று நினைத்ததால் அது காத்ரினாவைத் தாக்கியுள்ளது.

எப்படியோ தப்பித்து வெளிவந்த காதரினா, இது குறித்து கூறும் போது, ‘திடீரென்று இப்படி ஆபத்து ஏற்படும் போது பய உணர்வினால் அட்ரினலைன் எனும் ஹார்மோன் அதிகளவில் சுரந்து உங்களை பதற்றமாக்கிவிடும். அது மேலும் ஆபத்துக்கு வழிவகுக்கும் என்பதால் நான் மிகவும் அமைதியாகவே இருந்தேன்’ என்றார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காதரினாவிற்கு முதலுதவி அளிக்கப்பட்டு கைகளில் தையல் போடப்பட்டது. அந்த மீனின் பற்குறி இன்னும் எனது கைகளில் உள்ளது என்று கூலாக இந்தப் புகைப்படத்தை வெளியிட்டு பதிவிட்டுள்ளார் இந்த இளம் பெண்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com