குல்பூஷண் ஜாதவ் விவகாரம்: சர்வதேச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்கிறது பாகிஸ்தான்

பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக, மரண தண்டனை விதிக்கப்பட்ட குல்பூஷண் ஜாதவ் விவகாரத்தில், சர்வதேச நீதிமன்றத்தில் பாகிஸ்தான் தரப்பு வரும் 17-ஆம் தேதி தனது பதில் அறிக்கையை

பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக, மரண தண்டனை விதிக்கப்பட்ட குல்பூஷண் ஜாதவ் விவகாரத்தில், சர்வதேச நீதிமன்றத்தில் பாகிஸ்தான் தரப்பு வரும் 17-ஆம் தேதி தனது பதில் அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளது.
இந்தியக் கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவை, பலூசிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவம் கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் கைது செய்தது. 
பாகிஸ்தானில் உளவு வேலை பார்த்தாகவும், பயங்கரவாதத்தை தூண்டியதாகவும், அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதையடுத்து, குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்வதற்காக, பாகிஸ்தான் அரசிடம் இந்திய அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால், எந்தப் பலனும் கிடைக்காததால், நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தை இந்திய அரசு கடந்த ஆண்டு மே மாதம் நாடியது. சர்வதசே நீதிமன்றம், இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்தது.
இதையடுத்து, இந்திய அரசும், பாகிஸ்தான் அரசும் தங்களது வாதங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது.அதன்படி, இந்திய அரசு தனது வாதத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ஆம் தேதி தனது வாதத்தை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்தது. அதற்கு, பாகிஸ்தான் அரசு கடந்த டிசம்பர் 13-ஆம் தேதி எதிர் வாதத்தை தாக்கல் செய்தது.
இதையடுத்து, இந்திய அரசு இரண்டாவது முறையாக தனது வாதத்தை கடந்த ஏப்ரல் மாதம் 17-ஆம் தேதி எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்தது. 
அதற்குப் பதிலளிக்கும் வகையில், பாகிஸ்தான் அரசு, வரும் 17-ஆம் தேதி புதிய அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளது. இந்த அறிக்கையை, பாகிஸ்தான் அட்டார்னி ஜெனரல் கவார் குரேஷி தயாரித்துள்ளார்.
அடுத்த ஆண்டில் விசாரணை: இதனிடையே, சர்வதேச நீதிமன்றத்தில் அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதம் வரை பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளதால், குல்பூஷண் ஜாதவ் விவகாரம் அடுத்த ஆண்டு கோடையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று மூத்த வழக்குரைஞர் ஒருவர் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com