நேட்டோவுக்கு கூடுதல் நிதி: உறுப்பு நாடுகளிடம் டிரம்ப் வலியுறுத்தல்

நேட்டோ அமைப்பின் ராணுவச் செலவுகளுக்கான நிதி ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்கும்படி மற்ற உறுப்பு நாடுகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தினார்.
செய்தியாளர்களிடையே உரையாற்றும் டிரம்ப்.
செய்தியாளர்களிடையே உரையாற்றும் டிரம்ப்.

நேட்டோ அமைப்பின் ராணுவச் செலவுகளுக்கான நிதி ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்கும்படி மற்ற உறுப்பு நாடுகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தினார்.
இதன் காரணமாக, அவருக்கும், பிற உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கும் இடையே பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ùஸல்ஸில் நடந்த கூட்டத்தில் காரசாரமான விவாதம் நடைபெற்றது.
வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ராணுவக் கூட்டமைப்பான நேட்டோ, கடந்த 1949-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
ஐரோப்பிய நாடுகளில் இந்த அமைப்பின் செயல்பாட்டுக்காக அந்த நாடுகள் போதிய அளவு நிதி ஒதுக்குவதில்லை என்றும், அதன் காரணமாக ஐரோப்பிய கண்டத்தின் பாதுகாப்புக்கான செலவுகளை அமெரிக்கா நியாயமற்ற முறையில் தோளில் சுமக்க வேண்டியிருப்பதாகவும் அதிபர் டொனால்ட் டிரம்ப் நீண்ட காலமாக குற்றம் சாட்டி வருகிறார்.
இந்த நிலையில், நேட்டோ அமைப்பின் வருடாந்திர மாநாடு, அதன் தலைமையகம் அமைந்துள்ள பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ùஸல்ஸில் புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் நடைபெற்றது.
அப்போது, நேட்டோவின் பாதுகாப்பு செலவுகளுக்காக ஐரோப்பிய நாடுகள் தங்களது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜிடிபி) 2 சதவீதத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தினார்.
இதன் காரணமாக, ஐரோப்பிய நாடுகள் நேட்டோ அமைப்புக்கான பாதுகாப்பு நிதி ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்க வேண்டி நிலை ஏற்பட்டது.
தங்களது ஜிடிபி-யில் 2 சதவீதத்தை நேட்டோ அமைப்பின் பாதுகாப்பு செலவுகளுக்காக வரும் 2024-ஆம் ஆண்டு முதல் ஒதுக்கீடு செய்ய ஐரோப்பிய நாடுகள் ஏற்கெனவே ஒப்புக் கொண்டுள்ளன.
எனினும், அதனை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று டிரம்ப் வற்புறுத்தியது உறுப்பு நாடுகளை அதிர்ச்சியடையச் செய்தது.
அதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக காரசாரமான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்'
நேட்டோ அமைப்பின் பாதுகாப்பு நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வியாழக்கிழமை கூறியதாவது: நேட்டோ ராணுவச் செலவுகள் குறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
அந்தப் பேச்சுவார்த்தையின்போது, நேட்டோ ராணுவச் செலவுகளுக்காக தங்களது பங்களிப்பை அதிகரிக்க அனைத்து நாடுகளும் ஒப்புக் கொண்டன. இதுவரை இல்லாத அளவுக்கு அந்த அதிக நிதி ஒதுக்கீடு செய்யும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com