பஹ்ரைன் பிரதமருடன் சுஷ்மா ஸ்வராஜ் சந்திப்பு

பஹ்ரைன் பிரதமர் கலிஃபா பின் சல்மான் அல் கலிஃபாவை, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
பஹ்ரைனின் மனாமா நகரில் உள்ள அரண்மனையில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்த வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் - பஹ்ரைன் பட்டத்து இளவரசர் சல்மான் பின் ஹமாத் அல் கலிஃபா.
பஹ்ரைனின் மனாமா நகரில் உள்ள அரண்மனையில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்த வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் - பஹ்ரைன் பட்டத்து இளவரசர் சல்மான் பின் ஹமாத் அல் கலிஃபா.

பஹ்ரைன் பிரதமர் கலிஃபா பின் சல்மான் அல் கலிஃபாவை, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதுகுறித்து, இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் சுட்டுரையில் வெளியிட்ட பதிவுகளில் கூறியுள்ளதாவது: இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக பஹ்ரைனுக்கு சனிக்கிழமை வந்த அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ஞாயிற்றுக்கிழமை அந்நாட்டு பிரதமரை சந்தித்தார். அப்போது இந்தியா-பஹ்ரைன் இடையேயான மதிப்பு மிக்க உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக இருவரும் கலந்தாலோசித்தனர்.
முன்னதாக சுஷ்மா, பஹ்ரைன் வெளியுறவு அமைச்சர் ஷேக் காலித் பின் அகமது அல் கலிஃபா, பட்டத்து இளவரசர் சல்மான் பின் ஹமாத் அல் கலிஃபாவை சந்தித்து பேச்சு நடத்தினார். அந்த இரு தலைவர்களும் ஏற்கெனவே கடந்த 2015 பிப்ரவரியில் தில்லியில் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், தற்போது இருவரும் 2-ஆம் கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அப்போது, பஹ்ரைனில் குடியேறிய இந்திய சமூகத்தினர் அந்நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கு அளித்து வரும் பங்களிப்பு குறித்து ஷேக் காலித், சுஷ்மாவிடம் பாராட்டு தெரிவித்தார். பஹ்ரைனில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுமார் 3.50 லட்சம் முதல் 4 லட்சம் பேர் வரையில் வசிக்கின்றனர். இந்த எண்ணிக்கை பஹ்ரைன் மக்கள் தொகையில் நான்கில் ஒரு பகுதியாகும்.
இதனிடையே, மனாமா தேசிய நூலகத்துக்கு ஒரு பெட்டி நிறைய புத்தகங்களை சுஷ்மா அன்பளிப்பாக வழங்கினார். இந்தியாவின் பல்வேறு பரிமாணங்கள் குறித்து விளக்கும் அந்தப் புத்தகங்கள், பஹ்ரைன் மக்கள் இந்தியாவைக் குறித்து மேலும் அறிந்துகொள்ள வாய்ப்பு வழங்குவதாக இருக்கும் என்று ரவீஷ் குமார் அந்தப் பதிவு களில் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com