சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்த எகிப்தில் சட்டம்

தவறான செய்திகளைப் பதிவிடும் சமூக ஊடகப் பயன்பாட்டாளர்களின் கணக்குகளை முடக்கும் மசோதாவிற்கு, எகிப்து நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியது. 

தவறான செய்திகளைப் பதிவிடும் சமூக ஊடகப் பயன்பாட்டாளர்களின் கணக்குகளை முடக்கும் மசோதாவிற்கு, எகிப்து நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியது. 
இதைத் தொடர்ந்து, அந்நாட்டின் தலைவர் அப்தெல் ஃபத்தாவின் ஒப்புதலைப் பெறுவதற்காக மசோதா அனுப்பப்பட்டுள்ளது. அவர் கையெழுத்திட்ட பின், இந்த மசோதா, சட்டமாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
இந்த மசோதா, எத்தகைய சமூக ஊடகத்திலும், 5000-க்கும் மேற்பட்ட தொடர்வாளர்களைக் கொண்டு, தவறான செய்தியைப் பதிவிடுபவரின் கணக்கை அதிகாரிகள் முடக்க வழிகோலுகிறது. 
மேலும், எகிப்தின் ஊடகக் கட்டுப்பாட்டு மையமானது, இத்தகைய பணிகளை மேற்கொள்ளவும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com