மண்டேலாவின் 100-ஆவது பிறந்தநாள்: ஒபாமா உள்ளிட்டோர் மரியாதை

தென் ஆப்ரிக்காவில் நிறவெறிக்கு எதிராகப் போராடியவரும், அந்நாட்டு தந்தை என அழைக்கப்படுபவருமான நெல்சன் மண்டேலாவின் 100-ஆவது பிறந்தநாள் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
ஜோகன்னஸ்பர்கில் நடைபெற்ற நெல்சன் மண்டோலா பிறந்தநாள் சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோஸா, அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா.

அந்நாட்டின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்ற பிறந்தநாள் விழா சிறப்புக் கூட்டத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா பங்கேற்றுப் பேசினார். இந்தக் கூட்டத்தில் 15,000 மக்கள் பங்கேற்றனர்.
1990-ஆம் ஆண்டில் சிறையில் இருந்து மண்டேலா விடுதலையானபோது, உலகெங்கிலும் வாழும் மக்களின் இதயங்களில் நம்பிக்கை அலை பிறந்ததாக ஒபாமா நினைவுகூர்ந்தார்.
தமது தியாகம், ஈடு இணையில்லா தலைமை பண்பு ஆகியவற்றாலும், நல்லொழுக்கத்துக்கான எடுத்துக்காட்டாக இருந்ததாலும், ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையாக உருவெடுத்தவர் மண்டேலா என ஒபாமா குறிப்பிட்டார்.
மண்டேலாவின் வழி வந்தவரும், தென் ஆப்பிரிக்காவின் தற்போதைய அதிபருமான சிரில் ராமபோஸா, மண்டேலாவுக்கு புகழாரம் சூட்டினார். மண்டேலாவின் 100-ஆவது பிறந்தநாளை ஒட்டி, தமது ஊதியத்தில் பாதியை அறக்கட்டளை பணிகளுக்கு தானமாக கொடுக்க இருப்பதாகக் கூறிய அவர், மற்ற தலைவர்களும் இதைச் செய்ய முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
கிழக்கு கேப் மாகாணத்தில், மண்டேலாவின் சொந்த ஊரான வெúஸா நகரில், மருத்துவமனை திறப்பு, செடிகளை நடுவது, முதியோர்களுக்கு போர்வை வழங்குவது உள்ளிட்ட நலத்திட்ட பணிகளையும் அதிபர் ராமபோஸா நடத்தி முடித்தார்.
மண்டேலாவின் மனைவி மைக்கேல் கிராசா, அவரது புகழை பரப்பும் வகையில், சிறு நடைபயணம் ஒன்றை மேற்கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com