நோய் தடுப்பு மருந்துகளின் எதிர்விளைவால் ஆண்டுக்கு 57,000 குழந்தைகள் உயிரிழப்பு

இந்தியாவில், மருத்துவரின் பரிந்துரைகள் இல்லாமல், நோய் எதிர்ப்பு மருந்துகளை மிக அதிகமாக பயன்படுத்துவதால், செப்சிஸ் என்று சொல்லக் கூடிய நோய்த் தொற்று உருவாகி
நோய் தடுப்பு மருந்துகளின் எதிர்விளைவால் ஆண்டுக்கு 57,000 குழந்தைகள் உயிரிழப்பு

இந்தியாவில், மருத்துவரின் பரிந்துரைகள் இல்லாமல், நோய் எதிர்ப்பு மருந்துகளை மிக அதிகமாக பயன்படுத்துவதால், செப்சிஸ் என்று சொல்லக் கூடிய நோய்த் தொற்று உருவாகி, அதன் மூலம் ஆண்டுக்கு 57,000 குழந்தைகள் உயிரிழப்பதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வுகள் தொடர்பான அறிக்கை, பிரிட்டனில் இருந்து வெளியாகும் "தி ஜெர்னல் ஆஃப் இன்பெக்ஷன்' என்ற மருத்துவ பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.  பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில்தான் நோய் தடுப்பு மருந்துகள் அதிகளவில் பயன்படுத்தப்படுவதாக அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

சர்வதேச அளவில் கடந்த 2000-இல் இருந்து 2010-க்கு இடைப்பட்ட காலத்தில் நோய்த் தடுப்பு மருந்துகளின் பயன்பாடு என்பது 5,000 கோடி யூனிட் என்ற அளவில் இருந்து 7,000 கோடி யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக, குயின்ஸ்லாந்து தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இம்மானுவேல் டீவ்யி கூறுகையில், இந்தியாவில் நோய் தடுப்பு மருந்துகளை பயன்படுத்துவதால் ஏற்படும் நோய்தொற்று காரணமாக ஆண்டுதோறும் 57,000 குழந்தைகள் பலியாகின்றன என்று தெரிவித்தார்.

வளரும் நாடுகளில், நோய் தடுப்பு மருந்துகள் மூலம் வரும் நோய் தொற்று குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லை என்றும், இதனால், உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன என்றும் அவர் கூறினார். அமெரிக்காவில் இந்த நோய்த் தொற்று காரணமாக ஆண்டுதோறும் 20 லட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர். அதில், சராசரியாக ஆண்டுக்கு 23,000 பேர் பலியாகின்றனர். மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் நோய் தடுப்பு மருந்துகளை அதிகமாக வாங்கி பயன்படுத்துவம் வழக்கம் தென் அமெரிக்காவில் இயல்பான ஒன்றாக இருக்கிறது. ஆய்வு நடத்தப்பட்ட நாடுகளில், தாய்லாந்தில் மட்டுமே மருத்துவரின் பரிந்துரையின் பேரில் நோய் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட வேண்டும் என்ற விதி கடுமையாக பின்பற்றப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.

நோய் தடுப்பு மருந்துகளை நேரடியாக கடைகளில் விற்பனை செய்வதை தடை செய்யும் வகையிலான சட்டங்கள் பெரும்பாலான நாடுகளில் உள்ள போதிலும், அதை முறைப்படி அமல்படுத்துவதற்கான தேவை ஏற்பட்டிருப்பதாக அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com