பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை துவக்கம்: முன்னிலையில் இம்ரான் கான் கட்சி

புதனன்று நடைபெற்ற பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை துவங்கி, ஆரம்ப கட்ட வாக்கு எண்ணிக்கையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் கட்சி முன்னிலையில் உள்ளது. 
பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை துவக்கம்: முன்னிலையில் இம்ரான் கான் கட்சி

இஸ்லாமாபாத்: புதனன்று நடைபெற்ற பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை துவங்கி, ஆரம்ப கட்ட வாக்கு எண்ணிக்கையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் கட்சி முன்னிலையில் உள்ளது. 

பாகிஸ்தானில் 272 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு புதனன்று தேர்தல் நடைபெற்றது. அத்துடன் சேர்த்து பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான் மற்றும் கைபர்பக்துன்வா ஆகிய 4 மாகாண சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது.  இந்த தேர்தலில் நாடு முழுவதும் மொத்தம் 10 கோடியே 59 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். இதில் நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 3,459 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 577 மாகாண சட்டசபை தொகுதிகளுக்கு 8,396 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். பாகிஸ்தானில், பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க 137 தொகுதிகளில் வென்றாக வேண்டும்.

இந்த ஓட்டுப் பதிவிற்காக நாடு முழுவதும் 89 ஆயிரம் வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. வாக்குப் பதிவு இன்று காலை பலத்த பாதுகாப்புடன் துவங்கியது. ஆரம்பம் முதலே மக்கள் ஆர்வமுடம் வாக்களித்து வந்தனர். இந்நிலையில் சில இடங்களில் வன்முறை நடைபெற்றது.

குறிப்பாக பலுசிஸ்தான் மாகாணத்தின் குவெட்டா நகரில் தமீர் இ நவ்  கல்வி பள்ளிக்கூட காம்ளெக்சில்  உள்ள வாக்கு சாவடிக்கு வெளியே  தற்கொலைப்படை தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இந்த தாக்குதலில் 35  பேர் பலியாகி உள்ளனர்.

வாக்குப்பதிவு புதன் மாலை முடிந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணும் பணி துவங்கியது. ஆரம்ப கட்ட வாக்கு எண்ணிக்கை நிலவரத்தின் படி முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ–இன்சாப் கட்சி முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது இடத்தில் நவாஸ் ஷெரீப்பின்  பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியானது பின் தொடர்ந்து வருகிறது. பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ தலைமையில் களம் காணும் பாகிஸ்தான் மக்கள் கட்சி மூன்றாவது இடத்தில் உள்ளது. 

அநேகமாக இன்னும்  24 மணி நேரத்தில் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com