அரசியல் பார்வையை மாற்றிய இம்ரான்: இது தான் இம்ரான் கானின் வெற்றிப் பின்னணி

ராணுவம் மற்றும் அரசியல் மீதான பார்வை மாற்றமே இம்ரான் கான் வெற்றிக்கு காரணமாக கூறப்படுகிறது. 
அரசியல் பார்வையை மாற்றிய இம்ரான்: இது தான் இம்ரான் கானின் வெற்றிப் பின்னணி

ராணுவம் மற்றும் அரசியல் மீதான பார்வை மாற்றமே இம்ரான் கான் வெற்றிக்கு காரணமாக கூறப்படுகிறது. 

பாகிஸ்தானில் புதன்கிழமை நடைபெற்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன. இதில் தனிப்பெரும்பான்மை இல்லையென்றாலும் அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் நிலைக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான பிடிஐ கட்சி உருவெடுத்துள்ளது.

இம்ரான் கானுடைய இந்த வெற்றிப் பின்னணியில், ராணுவம் மீதான அவருடைய பார்வை மாறியதே காரணம் என்று கருதப்படுகிறது. அந்த பார்வை மாற்றம் தான் அவரை இந்த தேர்தலில் வெற்றி பெற வைத்துள்ளதாக விமர்சகர்கள் கருதுகின்றனர். 

இம்ரான் கான் வெற்றி பெற்ற இந்த தருணத்தில், பலம் வாய்ந்த பாகிஸ்தான் ராணுவத்துக்கு பிடித்தமானவர் இம்ரான், அதனால் தான் இந்த தேர்தலில் ராணுவம் பின்னணியில் இருந்து அவருக்கு வேலை பார்த்துள்ளது என்று விமர்சகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். 

ஆனால், இந்த குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையிலேயே ராணுவம் மீது இம்ரான் கானுடைய பார்வை முற்றிலுமாக மாறியுள்ளது. 

ராணுவம் மீதான பார்வை:

அன்று: 2012-இல் இம்ரான் கான் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது, 

"ராணுவ நாட்கள் முடிவடைந்தது. பாகிஸ்தானில் உண்மையான ஜனநாயகத்தை விரைவில் பார்க்க உள்ளீர்கள்" என்றார். இதைத்தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் அவர் அதிக இடங்களில் வெற்றி பெறவில்லை.   

இன்று: கடந்த மே மாதம் அவர் அளித்த ஒரு பேட்டியில் கூறுகையில், "இது பாகிஸ்தான் ராணுவம், எதிரி ராணுவம் இல்லை. ராணுவத்தை என்னோடு இணைத்து பயணிப்பேன்" என்றார்.

இதையடுத்து, நடைபெற்ற தற்போதைய தேர்தலில் அவர் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளார். 

இந்தியா மீதான பார்வை:

அன்று: 2012-இல் அவர் இந்தியாவுடன் நல்லுறவை வைக்க வேண்டும் விரும்பினார். 

இன்று: இந்த தேர்தலுக்கு முன்பு "முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மூலம் சதித் திட்டம் தீட்டி பாகிஸ்தான் ராணுவத்தை இந்தியா வலுவிழக்கச் செய்கிறது" என்றார். 

காஷ்மீர் மீதான பார்வை:

அன்று: அவர் 2013-இல் அளித்த ஒரு பேட்டியில், "இந்தியா, பாகிஸ்தான் இடையிலான பிரச்னையை தீர்க்க ராணுவம் மூலம் தீர்வு காண முடியாது. அப்போதைய போர் நிறுத்த ஒப்பந்தம் அமைதியை திரும்ப கொண்டு வருகிறது" என்றார்.

இன்று: ஆனால், ஜம்மு காஷ்மீரில் மனித உரிமை மீறல் குறிப்பிட்டு காஷ்மீர் மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று இம்ரான் கான் தெரிவித்தார்.   

ராணுவத்துக்கு எதிராக கருத்துகளை தெரிவித்து வந்தவர், ராணுவத்தை தன்னுடன் இணைந்துக்கொள்வேன் என் இந்த தேர்தலில் பார்வையை மாற்றியுள்ளார். இம்ரான் கான் தனது அரசியல் பயண பார்வையை இப்படி மாற்றியதே இந்த தேர்தலில் வெற்றி பெற்றதன் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com