கிம் ஜாங் உன்னை அமெரிக்காவுக்கு அழைப்பேன் - டிரம்ப்

சிங்கப்பூர் சந்திப்பு சிறப்பாக சென்றால் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை அமெரிக்காவுக்கு அழைப்பேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கிம் ஜாங் உன்னை அமெரிக்காவுக்கு அழைப்பேன் - டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சிங்கப்பூரில் வரும் 12-ஆம் தேதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இந்த சந்திப்பானது 2,500-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நடைபெறும் வரலாற்றுச் சிறப்புமிக்க சர்வதேச சந்திப்பாக கருதப்படுகிறது. 

இந்நிலையில், இந்த சந்திப்பு சிறப்பாக நடைபெற்றால் கிம் ஜாங் உன்னை அமெரிக்காவுக்கு அழைப்பேன் என்று அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், இந்த சந்திப்புக்கு பிறகு இருநாடுகளுக்கு இடையில் சாதாரண சூழல் உருவாகும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார். இந்த சந்திப்பு நேர்மறையாக நிறைவடைந்தால் வடகொரியாவின் பொருளாதாரத்துக்கு சீனா, தென்கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் உதவும் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.

இவர்கள் இருவரும் சிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஹோட்டலில் சந்தித்து பேசவுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com