தோ்தலில் போட்டியிட முஷாரஃபுக்கு மீண்டும் தடை

பாகிஸ்தான் முன்னாள் அதிபா் முராஃப் தோ்தலில் போட்டியிடுவதற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதியை அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை ரத்து செய்தது.
தோ்தலில் போட்டியிட முஷாரஃபுக்கு மீண்டும் தடை


இதையடுத்து, இந்த மாதம் 25-ஆம் தேதி நடைபெறவிருக்கும் பொதுத் தோ்தலில் பங்கேற்பதன் மூலம் மீண்டும் அரசியல் வாழ்வைத் தொடங்க முஷாரஃபுக்குக் கிடைத்த வாய்ப்பு கைநழுவிப் போனதாகக் கூறப்படுகிறது. 

தேசத் துரோகம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் காரணமாக, முஷாரஃப் வாழ்நாள் முழுவதும் தோ்தலில் போட்டியிடுவதற்கு பெஷாவா் உயா் நீதிமன்றறம் கடந்த 2013-ஆம் ஆண்டு தடை விதித்திருந்தது.

இந்த நிலையில், அந்தத் தடைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றறம், வரும் பொதுத் தோ்தலில் முஷாரஃப் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியை கடந்த வாரம் வழங்கியது.

மேலும், இது தொடா்பான விசாரணைக்காக நீதிமன்றறத்தில் முஷாரஃப் புதன்கிழமை ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டிருந்தாலும் அவா் கைது செய்யப்பட மாட்டார் என்று உறுதியளித்திருந்தார்.

அதையடுத்து, முஷாரஃப் தலைமையிலான அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (ஏபிஎம்எல்) கட்சி கூறுகையில், கைபா் பாக்துன்கவா மாகாணத்தில் அமைந்துள்ள சித்ரால் மாவட்டத்தில் முஷாரஃப் போட்டியிடுவார் என்று தெரிவித்தது.

இந்த நிலையில், குறிப்பிட்ட தேதியில் முஷாரஃப் நீதிமன்றறத்தில் ஆஜராகவில்லை. ரமலான் பண்டிகையாக இருப்பதாலும், சூழல் சரியாக இல்லாததாலும் நீதிமன்றத்தில் ஆஜராக கூடுதல் அவகாசம் தருமாறு அவரது வழக்குரைஞா்கள் நீதிமன்றத்தைக் கோரினா். 

எனினும், இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி சாகிப் நிஸார், ராணுவ வீரரான முஷாரஃப், ஒரு கோழையைப் போல் நீதிமன்றறம் வர அஞ்சுவதாக கண்டனம் தெரிவித்தார். 

மேலும், வியாழக்கிழமை (ஜூன் 14) மதியம் 2 மணிக்குள் நேரில் ஆஜராக வேண்டும் என்று முஷாரஃபுக்கு அவா் கெடு விதித்தார். 

எனினும், குறிப்பிட்ட நேரத்துக்குள் நீதிமன்றத்தில் ஆஜராக முஷாரஃப் தவறியதால், தோ்தலில் வேட்பமனு தாக்கல் செய்வதற்காக அவருக்கு கடந்த வாரம் அளிக்கப்பட்டிருந்த அனுமதியை, நீதிபதி ரத்து செய்தார். 

பாகிஸ்தானில் பல்வேறு வழக்குகளை எதிர்கொண்டுள்ள முஷாரஃப், மருத்துவ சிகிச்சைக்காக சிறப்பு அனுமதி பெற்று கடந்த 2016-ஆம் ஆண்டு துபை சென்றார். எனினும், சிகிச்சைக்குப் பிறகு அவா் இதுவரை நாடு திரும்பவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com