பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் தென்கொரியாவுடன் மீண்டும் போர் பயிற்சி

வடகொரியாவுடனான அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தால், தென்கொரியா நாட்டுடன் இணைந்து அமெரிக்கா மீண்டும் போர் பயிற்சியில் ஈடுபடும் என்று வடகொரியாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் தென்கொரியாவுடன் மீண்டும் போர் பயிற்சி

வடகொரியாவுடனான அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தால், தென்கொரியா நாட்டுடன் இணைந்து அமெரிக்கா மீண்டும் போர் பயிற்சியில் ஈடுபடும் என்று வடகொரியாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து சுட்டுரையில் அவர் வெளியிட்டிருக்கும் பதிவுகளில் தெரிவித்திருப்பதாவது:
தென்கொரியாவுடனான போர் பயிற்சியை நிறுத்துவது தொடர்பான யோசனையை நான்தான், வடகொரிய அதிபர் கிம் ஜோங்- உன்னுடன் நடத்திய பேச்சுவார்த்தையின்போது முன்வைத்தேன்.
போர் பயிற்சி நடத்துவதற்கு அதிக செலவு ஆகிறது. அதேபோல், நல்லெண்ணத்துடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தை மீது அது சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஆதலால், போர் பயிற்சியை நிறுத்துவது தொடர்பான யோசனையை நான் வெளியிட்டேன்.
அதேநேரத்தில், வடகொரியாவுடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தை தோல்வியடையும்பட்சத்தில், போர் பயிற்சியை உடனடியாக அமெரிக்கா தொடங்கும். ஆனால், இதுபோல் நடக்காது என்று நம்புகிறேன்.
சிங்கப்பூரில் வடகொரிய அதிபருடனான பேச்சுவார்த்தையின்போது அந்நாட்டுக்கு ஏராளமான சலுகைகளை நான் அளித்ததாக பொய் செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதை கண்டிக்கிறேன்.
அந்த பேச்சுவார்த்தையின் மூலம், உலகில் நாங்கள் அமைதியை ஏற்படுத்தியுள்ளோம். பேச்சுவார்த்தையின் முடிவில் மேலும் பல நன்மைகள் ஏற்படும். அணுஆயுதத்தை கைவிடச் செய்வது தொடர்பாக வடகொரியாவுடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தை அனைத்து தரப்பினராலும் பாராட்டப்படுகிறது. ஆசிய கண்டம் முழுவதும் அதை கொண்டாடுகிறது என்று அந்தப் பதிவுகளில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா, வடகொரியா இடையே நிலவிய பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக சிங்கப்பூரில் கிம் ஜோங்- உன், டிரம்ப் ஆகியோர் கடந்த 12ஆம் தேதி சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தென்கொரியாவுடனான போர் பயிற்சியை அமெரிக்கா நிறுத்தி வைப்பது தொடர்பான திட்டத்தை டிரம்ப் வெளியிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com