சீன அதிபரை சந்திக்கிறார் கிம் ஜோங் உன்

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் 2 நாள் பயணமாக செவ்வாய்கிழமை சீனா சென்று அந்நாட்டு அதிபரை சந்திக்கிறார்.
சீன அதிபரை சந்திக்கிறார் கிம் ஜோங் உன்

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் கடந்த 12-ஆம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்தார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பில் வடகொரியாவில் அணு ஆயுதங்களை முற்றிலும் அழிப்பதாக கிம் ஜோங் உன் ஒப்புக்கொண்டார். இந்நிலையில், கிம் தற்போது சீன அதிபர் ஜின்பிங்கை சந்திக்கிறார். 

கிம் ஏற்கனவே, சீன அதிபரை மார்ச் மற்றும் மே மாதங்களில் சந்தித்தார். இதைத்தொடர்ந்து தற்போது 3-முறையாக சந்திக்கிறார். சீனா தான் வடகொரியாவின் ஒரே நட்பு நாடு. அதனால், அமெரிக்க அதிபருடனான சந்திப்பு குறித்து இந்த சந்திப்பின் போது ஜின்பிங்கிடம் கிம் ஜோங் நிச்சயம் விவரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கிம் ஜோங் உன்-இன் இந்த சந்திப்பு இதுவரை உறுதிசெய்யவில்லை. ஆனால், அவர் சீனா செல்வது மட்டும் தற்போது உறுதியாகியுள்ளது. 

அமெரிக்கா - வடகொரியா அதிபர்களின் சந்திப்புக்கு சீனா நேரடி காரணமாக இல்லையென்றாலும், இருநாட்டு சந்திப்பில் சீனா முக்கிய பங்கு வகித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com