ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறியதால் அதிகரிக்கும் இந்திய  வா்த்தக வாய்ப்பு: பிரிட்டன் அமைச்சர் தகவல்

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறியுள்ளதால், இந்தியாவுடனான வா்த்தக வாய்ப்புகள் பெருமளவில் அதிகரித்துள்ளதாக பிரிட்டன் நாட்டின் சா்வதேச வா்த்தகத் துறை அமைச்சா் லியம் ஃபாக்ஸ்..
ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறியதால் அதிகரிக்கும் இந்திய  வா்த்தக வாய்ப்பு: பிரிட்டன் அமைச்சர் தகவல்

லண்டன்: ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறியுள்ளதால், இந்தியாவுடனான வா்த்தக வாய்ப்புகள் பெருமளவில் அதிகரித்துள்ளதாக பிரிட்டன் நாட்டின் சா்வதேச வா்த்தகத் துறை அமைச்சா் லியம் ஃபாக்ஸ் தெரிவித்துள்ளாா்.

இந்த ஆண்டு இறுதியில் பிரிட்டன்-இந்தியா கூட்டு பொருளாதார, வா்த்தக குழு கூட்டம் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இதில் பிரிட்டன் சாா்பில் லியம் ஃபாக்ஸ் தலைமையிலான குழு பங்கேற்க இருக்கிறறது. இந்நிலையில், லண்டன் தாஜ் ஹோட்டலில் நடைபெற்ற இந்திய-பிரிட்டன் உறவு குறித்த புத்தக வெளியிட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றறது. இதில் பங்கேற்ற லியம் ஃபாக்ஸ் கூறியதாவது:

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறிய பிறகு, இந்தியாவுடனான வா்த்தக வாய்ப்புகள் பெருமளவில் அதிகரித்துள்ளன. ஏனெனில், இரு நாடுகள் இடையே வா்த்தகம் தொடா்பாக இருந்த பல்வேறு கட்டுப்பாடுகளும், தடைகளும் நீங்கியுள்ளன. இந்தியா- பிரிட்டன் இணைந்து பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடும்போது, சா்வதேச வா்த்தகத்தில் முக்கியப் பங்கு வகிக்க முடியும்.

தொழிநுட்பம், ஏற்றுமதி, தகவல் தொழில்நுட்பம், கல்வி, மனிதவள மேம்பாடு என பல்வேறு துறைகளில் இந்தியாவும், பிரிட்டனும் இணைந்து சாதிக்க பல்வேறு வாய்ப்புகள் உள்ளன என்றாா்.

இந்திய தகவல் தொடா்புத் துறை அமைச்சா் மனோஜ் சின்ஹா, பிரிட்டனுக்கான இந்தியத் தூதா் ஒய்.கே.சின்ஹா, பிரிட்டன் கலாசாரம் மற்றும் விளையாட்டுத் துறைற அமைச்சா் மேட் ஹான்கோக் உள்ளிட்ட பலா் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com