ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் இருந்து விலகியது அமெரிக்கா 

மனித உரிமை தொடர்பான விவகாரங்களில் தன்னிச்சையாக நடந்து கொள்கிறது என்று குற்றம் சட்டி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் இருந்து அமெரிக்கா விலகி உள்ளது.
ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் இருந்து விலகியது அமெரிக்கா 

நியுயார்க்: மனித உரிமை தொடர்பான விவகாரங்களில் தன்னிச்சையாக நடந்து கொள்கிறது என்று குற்றம் சட்டி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் இருந்து அமெரிக்கா விலகி உள்ளது.

சர்வதேச நாடுகளில் நடைபெறும் பல்வேறு விதமான மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக, ஐநாவால் சர்வதேச மனித உரிமை ஆணையம் உருவாக்கப்பட்டது.

இந்த அமைப்பு துவங்கப்பட்டதிலிருந்து அமெரிக்கா இதன் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தது. பெரும்பாலான விவகாரங்களில் இந்த அமைப்பானது மிகவும் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது என்று அமெரிக்கா குற்றம் சாட்டி வந்தது.

அதிலும் குறிப்பாக இஸ்ரேல் தொடர்பான விவகாரங்களில் மனித உரிமை ஆணையத்தின் நிலைப்பாடுகளை அமெரிக்கா கடுமையாக விமர்சித்து வந்தது.  அத்துடன் பெரும்பாலான சமயங்களில் இந்த அமைப்பின் செயல்பாடு கேலிக்கூத்தாக அமைந்திருப்பதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.  

இந்நிலையில் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக, ஐநாவுக்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹேலி அறிவித்துள்ளார். 

அமெரிக்கா அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்ற பின்னர் யுனெஸ்கோ மற்றும் பருவ நிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் உடன்பாடு ஆகியவற்றால் இருந்து அமெரிக்கா விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com