மக்கள் விரும்பும் அதிபராக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் இருப்பதன் காரணம் இதுதான்!

நியூசிலாந்து நாட்டின் பிரதமரான ஜெசிந்தா ஆர்டெர்னுக்கு தற்போது 37 வயதாகிறது. இளம்
மக்கள் விரும்பும் அதிபராக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் இருப்பதன் காரணம் இதுதான்!

நியூசிலாந்து நாட்டின் பிரதமரான ஜெசிந்தா ஆர்டெர்னுக்கு தற்போது 37 வயதாகிறது. இளம் வயதிலேயே பிரதமரான பெண் அதிபர் இவர். தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருக்கும் கிளார்க் கேஃபோர்ட்டை (Clarke Gayford) திருமணம் செய்துள்ள ஜெசிந்தா, கடந்த ஜனவரி மாதம் தான் கர்ப்பமாக இருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்னுக்கு இரு தினங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. தனது குழந்தை பிறந்த மகிழ்ச்சியான செய்தியை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார் ஜெசிந்தா. மாலை 4.45-க்கு தனக்கு ஆரோக்கியமான பெண் குழந்தை பிறந்ததுள்ளது. அதன் இடை 3.31 கிலோ என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.  கணவர் மற்றும் குழந்தையுடனான புகைப்படத்தை இன்ஸ்ட்ராகிராமிலும்  ட்விட்டரிலும் அவர் வெளியிட்டார். மருத்துவமனையிலிருந்து இன்று வீடு திரும்புவார் ஜெசிந்தா. குழந்தையை கவனித்துக் கொள்ள 6 வாரங்கள் விடுப்பு எடுத்துள்ளாராம். இந்நிலையில் அவருடைய பணிகளை அந்நாட்டின் துணைப் பிரதமர் கவனிப்பார்.

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தாவுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். மேலும் ஜெசிந்தாவிற்கு மக்களிடமிருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. அனைவரும் விரும்பும் பிரதமராக ஜெசிந்தா திகழக் காரணம் அவரின் எளிமையும் மக்களின் பிரச்னையை அறிந்து செயல்படும் தன்மையும் என்கிறார்கள் நியூசிலாந்து மக்கள். பிரதமர் ஜெசிந்தாவின் பெற்றோர் ரோஸ், லாரல் ஆர்டெர்ன் கூறுகையில், தாங்கள் உயிருடன் இருக்கும் போதே தங்கள் மகளுக்கு குழந்தை பிறந்தது மகிழ்ச்சியாக உள்ளது என்றும் குழந்தை ஜெசிந்தாவைப் போலவே உல்ளதென்றும் தெரிவித்தனர்.

பிரதமர் பதவியில் உள்ள போது, குழந்தை பெற்ற உலகின் இரண்டாவது பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் ஆவார். இதற்கு முன் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் மறைந்த பெனாசீர் பூட்டோ பதவியிலிருந்த போது, குழந்தைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com