அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு எதிராக போராட்டம்:  இந்திய வம்சாளி பெண் எம்.பி. கைது 

அமெரிக்க அதிபர் டிரம்ப் செயல்படுத்தி வரும் குடியேற்ற தடைச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்திய இந்திய வம்சாளி பெண் எம்.பி. கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு எதிராக போராட்டம்:  இந்திய வம்சாளி பெண் எம்.பி. கைது 

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் செயல்படுத்தி வரும் குடியேற்ற தடைச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்திய இந்திய வம்சாளி பெண் எம்.பி. கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல், மே மாதங்களில் அமெரிக்காவுக்குள்  சட்டவிரோதமாக பல்வேறு நாடுகளில் இருந்து அகதிகளாக வந்து குடியேறிய 1940 பேரை டிரம்ப் அரசு சமீபத்தில் கைது செய்தது. அத்துடன் அவர்களில் குழந்தைகள் மற்றும் பெற்றோர்களை தனியாக பிரித்து வைத்து சிறையிலடைத்தது. டிரம்பின் இத்தகைய கொடும் செயலுக்கு உள்நாட்டு பொதுமக்கள் உட்பட பல்வேறு நாட்டு தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதன் எதிரொலியாக கடந்த சில தினங்களுக்கு முன்பு குழந்தைகளை பெற்றோரிடமிருந்து பிரிக்கும் சட்டத்தினை அதிபர் ட்ரம்ப் வாபஸ் பெற்றார். அதேசமயம் இந்த சட்டத்தின்படி இந்தியாவை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு நியூமெக்சிகோ மாகாண சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

டிரம்ப் அரசின் இத்தகைய செயலை கண்டித்தும், கைது செய்யப்பட்டோரை விடுவிக்கக்கோரியும் 500 பெண்களுடன் இணைந்து,  அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கபட்ட முதல் இந்திய வம்சாவளி பெண் எம்.பியான பிரமிளா ஜெயபால் நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் ஒன்றை முன்னின்று நடத்தினார். போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறை தற்போது கைது செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com