செய்தித் துளிகள் 

செய்தித் துளிகள் 

கெளதமாலா
கடும் கண்டனங்களையும் மீறி இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதரத்தை டெல்-அவிலிருந்து ஜெருசலேமுக்கு அமெரிக்கா வரும் மே மாதம் 14-ஆம் தேதி மாற்றிய இரண்டு நாள்களில், தங்கள் நாட்டுத் தூதரகமும் ஜெருசலேம் நகருக்கு மாற்றப்படும் என்று கெளதமாலா அதிபர் ஜிம்மி மொரேல்ஸ் அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான்
பாகிஸ்தானில் இஸ்லாமிய ஷரியத் சட்டத்தை அமல்படுத்தக் கோரி சர்ச்சைக்குரிய மதவாதத் தலைவர் மெளலானா அப்துல் அஜீஸ் தாக்கல் செய்த மனுவை அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

நேபாளம்
பாகிஸ்தான் பிதமர் ஷாஹித் கெகியான் 2 நாள் அரசு முறைப் பயணமாக நேபாளத்துக்கு திங்கள்கிழமை வந்தார். நேபாளத்தின் புதிய பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் அழைப்பை ஏற்று அவர் அந்த நாட்டுக்கு வந்துள்ளார்.

துருக்கி
இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக 12 பேரை துருக்கி போலீஸார் தலைநகர் அங்காராவில் கைது செய்துள்ளனர். இது தவிர, மேலும் 8 ஐ.எஸ். பயங்கரவாதிகளை போலீஸார் தேடி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com