அமெரிக்க ஆளில்லா விமான தாக்குதல்: ஆப்கனில் 21 தலிபான்கள் பலி

அமெரிக்க ஆளில்லா விமானம் ஆப்கனில் நிகழ்த்திய தாக்குதலில் 21 பாகிஸ்தான் தலிபான்கள் உயிரிழந்தனர்.இதுகுறித்து பாகிஸ்தான உளவுப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்ததாவது: 

அமெரிக்க ஆளில்லா விமானம் ஆப்கனில் நிகழ்த்திய தாக்குதலில் 21 பாகிஸ்தான் தலிபான்கள் உயிரிழந்தனர்.
இதுகுறித்து பாகிஸ்தான உளவுப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்ததாவது: 
அமெரிக்க ஆளில்லா விமானங்கள் மூலம் இரண்டு ஏவுகணைகள் ஆப்கன் பகுதிக்குள் வீசப்பட்டது. இந்த ஏவுகணைகள், பாகிஸ்தான் தலிபான் அமைப்பின் தலைவர் முல்லா ஃபஸுல்லாவை குறிவைத்து வீசப்பட்டது. ஆப்கானிஸ்தானின் மறைவிடங்களில் அவர் ஒளிந்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து இந்த அதிரடி தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. 
இந்த ஏவுகணை தாக்குதலின்போது பஸுல்லா அங்கு இல்லை. இருப்பினும், அவரது மகன் இந்த தாக்குதலில் பலியானார். மேலும், பாகிஸ்தான் தலிபானின் மூன்று முக்கிய தளபதிகள் உள்பட மொத்தம் 21 பேர் இந்த தாக்குதலில் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர். 
பாகிஸ்தான் எல்லையிலிருந்து சில மைல் தொலைவில் உள்ள ஆப்கனின் குனார் மாகாணத்தில்தான் இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இந்த தாக்குதல் குறித்து அமெரிக்கா எதுவும் கருத்து கூறவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com