செய்தித் துளிகள்

அமெரிக்கா: அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட டிரம்ப்புக்கு மக்களின் ஆதரவைத் திரட்டும் வகையில் ரஷியா தலையிட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று இதுகுறித்து விசாரித்து வந்த நாடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்துள்ளது.


மெக்ஸிகோ: கடந்த 2014-ஆம் ஆண்டில் 43 மாணவர்களை தொடர்ந்து படுகொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, முக்கியக் குற்றவாளி என்று சந்தேகிக்கப்படும் எரிக் யுரியல் என்ற நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.


பாலஸ்தீனம்: காஸா பகுதியில் பாலஸ்தீன பிரதமர் ரமி ஹம்தலா செவ்வாய்க்கிழமை சென்றுகொண்டிருந்த வாகன அணிவகுப்பில் வெடிகுண்டுத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. பிரதமரைக் கொல்வதற்காக காஸா பயங்கரவாதிகள் இந்தத் தாக்குதலை நிகழ்த்தியதாகக் கூறப்படுகிறது.


ஈராக்: தனி நாடு கோரி வரும் குர்து இனத்தவர் பெரும்பான்மையாக வசிக்கும் குர்திஸ்தான் மாகாணத்துக்கு விமானங்கள் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை, 6 மாத இடைவெளிக்குப் பிறகு ஈராக் செவ்வாய்க்கிழமை விலக்கிக் கொண்டது.


ரஷியா: பிரிட்டனுக்காக வேவு பார்த்த தங்கள் ராணுவத்தின் முன்னாள் உளவாளி மீது நச்சுத்தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து விளக்கமளிக்குமாறு பிரிட்டன் கேட்டுள்ளதை ரஷியா புறக்கணித்துள்ளது. எனினும், இந்த விவகாரம் குறித்து பிரிட்டனுக்கு அளிக்கத் தயார் எனவும் அந்த நாடு கூறியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com