புகைப்பிடிப்போர் மரணங்களில் லாபம் பார்க்கும் புகையிலை நிறுவனங்கள்

ஒவ்வொரு புகைபிடிப்போர் மரணத்தில் இருந்தும் உலக அளவிலுள்ள பெரிய புகையிலை நிறுவனங்கள் 9,730 கோடி டாலர் மதிப்பிலான லாபத்தை ஈட்டுவது ஆய்வொன்றின் மூலமாக தெரியவந்துள்ளது.
புகைப்பிடிப்போர் மரணங்களில் லாபம் பார்க்கும் புகையிலை நிறுவனங்கள்

ஒவ்வொரு புகைபிடிப்போர் மரணத்தில் இருந்தும் உலக அளவிலுள்ள பெரிய புகையிலை நிறுவனங்கள் 9,730 கோடி டாலர் மதிப்பிலான லாபத்தை ஈட்டுவது ஆய்வொன்றின் மூலமாக தெரியவந்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க புற்றுநோய் சங்கம் மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
உலக அளவில் கடந்த 2016-ஆம் ஆண்டில் மட்டும் 71 லட்சம் பேரின் மரணத்துக்கு புகையிலை காரணமாகியுள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் புகைப்பிடிக்கும் பழக்கமுடையவர்கள். புகையிலையை இதர வழிமுறைகளில் பயன்படுத்தி இறந்தோர் எண்ணிக்கை 8,84,000-ஆகும்.
புகையிலை நோய் தொடர்பாக இறப்போரின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக அந்த துறை லாப மீட்டும் போக்கும் வேகமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில், கடந்த 2015-இல் உலகின் மிகப்பெரிய புகையிலை நிறுவனங்கள் ஈட்டிய லாபம் 6,227 கோடி டாலரை தாண்டியுள்ளது.
அதன்படி பார்க்கையில், ஒவ்வொரு புகைப்பிடிப்போர் மரணத்தில் இருந்தும் அந்த நிறுவனங்கள் 9,730 டாலர் மதிப்பிலான லாபத்தை ஈட்டியுள்ளன என்பது கவனிக்கத்தக்கது.
உலக பொருளாதாரத்தில் ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சம் கோடி டாலர் புகையிலைப் பொருள்களுக்காக செலவிடப்படுகிறது. இது, ஒட்டுமொத்த உலக பொருளாதர உற்பத்தியில் 2 சதவீதம் அளவுக்கு சமம்.
குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளில்தான் 80 சதவீதம் புகையிலைப் பொருள்கள் தொடர்பான மரணங்கள் ஏற்படுகின்றன.
புகையிலை கட்டுப்பாட்டு சட்டங்கள் கடுமையாக பின்பற்றாத நாடுகளை இலக்காக வைத்தே புகையிலை தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் வர்த்தகத்தை விரிவுபடுத்துகின்றன. சஹாரன் ஆப்பிரிக்கப் பகுதிகளில் மட்டும் 1980 மற்றும் 2016 ஆண்டுகளுக்கு இடையில் புகையிலை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 52 சதவீதம் உயர்ந்துள்ளதை இதற்கு உதாரணமாக கூறலாம் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com