செய்தித் துளிகள்

செய்தித் துளிகள்

பாகிஸ்தான்
பாகிஸ்தானில் சிறுபான்மை சீக்கிய மதத்தினரின் திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சட்ட மசோதா அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் புதன்கிழமை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.


ஜப்பான்
வட கொரிய அதிபர் கிம் ஜோங்கைச் சந்திக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சம்மதித்துள்ள நிலையில், கிம் ஜோங்குடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வந்த ஜப்பான் பிரதமர் ஷின்úஸா அபே-வும் அவரை நேரில் சந்திப்பது குறித்து பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


பிலிப்பின்ஸ்
போதை மருந்துக் கடத்தல் கும்பல்களுக்கு எதிரான நடவடிக்கைகளின்போது பிலிப்பின்ஸ் அரசு மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாகக் கூறப்படுவது குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரித்து வரும் நிலையில், அந்த நீதிமன்றத்தை ஏற்கும் ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அதிபர் ரோட்ரிகோ டுடேர்தே அதிரடியாக அறிவித்துள்ளார்.


பப்புவா நியூ கீனியா
கடந்த மாதம் 26-ஆம் தேதி 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பப்புவா நியூ கீனியாவில், அந்த நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை புதன்கிழமை 125-ஆக உயர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


நைஜீரியா
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பெரும்பான்மை கிறிஸ்துவர்களான விவசாய சமூகத்தினருக்கும், முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடோடி இனத்தவருக்கும் இடையே தொடர்ந்து நடைபெற்று வரும் மோதலில் ஒரு பகுதியாக, திங்கள்கிழமை 25 பேர் உயிரிழந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com