மதக் கலவரம்- சமூக வலைதளங்களுக்கு தடை நீக்கம்: இலங்கை அரசு முடிவு

மதக் கலவரம்- சமூக வலைதளங்களுக்கு தடை நீக்கம்: இலங்கை அரசு முடிவு

இலங்கையின் கண்டி மாவட்டத்தில் வெடித்த மதக் கலவரம் காரணமாக அந்த நாட்டில் சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை, இன்னும் சில நாள்களில் நீக்கப்படும் என்று அதிபர் மைத்ரிபாலா சிறீசேனா

இலங்கையின் கண்டி மாவட்டத்தில் வெடித்த மதக் கலவரம் காரணமாக அந்த நாட்டில் சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை, இன்னும் சில நாள்களில் நீக்கப்படும் என்று அதிபர் மைத்ரிபாலா சிறீசேனா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ஜப்பானில் இலங்கை வம்சாவளியினரிடையே செவ்வாய்க்கிழமை பேசியதாவது:
மதக் கலவரம் பரவாமல் தடுப்பதற்காக முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தாற்காலிகத் தடை இன்னும் சில நாள்களில் விலக்கிக் கொள்ளப்படும்.
எந்தவொரு தகவல் தொடர்பு ஊடகமும் சமுதாயத்துக்கு நன்மை அளிக்கக் கூடியதுதான் என்றாலும், அந்த ஊடகங்களைப் பயன்படுத்தி வன்முறையைப் பரப்பும் சக்திகளை அடக்குவதற்காக அவற்றைத் தடை செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
செல்லிடப் பேசிகள், கணினிகள், இணையதளம், சமூக வலைதளங்கள் மக்களுக்கு நன்மை அளித்தாலும், சமூக விரோதிகள் அவற்றைத் தவறாகப் பயன்படுத்துவதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது என்றார் அவர்.
முஸ்லிம்களைச் சிறுபான்மையாகக் கொண்ட கண்டி மாவட்டத்தின் தெல்டினியா பகுதியில், முஸ்லிம்களால் கடந்த 22-ஆம் தேதி தாக்கப்பட்ட பெளத்த மதத்தைச் சேர்ந்த ஒருவர், மருத்துவமனையில் கடந்த 3-ஆம் தேதி உயிரிழந்தார்.
இதையடுத்து, கண்டி மாவட்டத்தில் பெளத்த மதத்தினருக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே கடந்த திங்கள்கிழமை கலவரம் வெடித்தது. அப்போது முஸ்லிம்களுக்கு சொந்தமான இடங்களில் புத்த மதத்தினர் புகுந்து சூறையாடினர். இதில் 2 பேர் உயிரிழந்தனர்.
இந்தக் கலவரத்தைத் தொடர்ந்து, இலங்கையில் நெருக்கடி நிலை அறிவித்த அந்த நாட்டு அரசு, முகநூல், 'வாட்ஸ்அப்' போன்ற சமூக வலைதளங்களுக்குத் தடை விதித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com