செய்​தித் துளி​கள்

செய்​தித் துளி​கள்

​இந்​தோ​னே​சியா
​அ​ர​சி​யல்​வா​தி​க​ளைப் பற்றி விமர்​சிப்​ப​வர்​க​ளுக்கு சிறைத் தண்​டனை பெற்​றுத் தரும் புதிய சட்டத்தை இந்​தோ​னே​சிய நாடா​ளு​மன்​றம் வியா​ழக்​கி​ழமை இயற்​றி​யது. உல​கின் 3-ஆவது பெரிய ஜன​நா​யக நாடான இந்​தோ​னே​சி​யா​வில் இந்​தச் சட்டம் இயற்​றப்​பட்​டுள்​ளது சர்ச்​சையை ஏற்​ப​டுத்​தி​யுள்​ளது.


பாகிஸ்​தான்
நீதி​மன்ற அவ​ம​திப்​பில் ஈடு​பட்​ட​தாக பாகிஸ்​தான் மத்​திய உள்​துறை அமைச்​சர் தலால் செளத்ரி மீது சுமத்​தப்​பட்​டுள்ள குற்​றச்​சாட்டை உச்ச நீதி​மன்​றம் வியா​ழக்​கி​ழமை உறுதி செய்​தது. பனாமா ஆவண வழக்​கில் பாகிஸ்​தான் முன்​னாள் பிர​த​மர் நவாஸ் ஷெரீஃப் தகுதி நீக்​கம் செய்​யப்​பட்​டது தொடர்​பாக நீதி​மன்​றத்தை அவர் விமர்​சித்​தி​ருந்​தார்.


செனெ​கல்
வட மேற்கு ஆப்​பி​ரிக்​கா​வில் அமைந்​துள்ள செனெ​கல் நாட்டில், ராணுவ ஹெலி​காப்​டர் விழுந்து நொறுங்கி 6 பேர் உயி​ரி​ழந்​த​னர்; 14 பேர் காய​ம​டைந்​த​னர். புதன்​கி​ழமை இந்த விபத்து ஏற்​பட்​ட​போது அந்த ஹெலி​காப்​ட​ரில் 20 பேர் இருந்​த​தாக தக​வல்​கள் தெரி​விக்​கின்​றன. 


அமெ​ரிக்கா
ஃபுளோ​ரிடா மாகாண பள்​ளித் தாக்​கு​த​லுக்​குப் பிறகு, பள்​ளி​க​ளில் பாது​காப்பை அதி​க​ரிப்​ப​தற்​காக உரு​வாக்​கப்​பட்ட புதிய சட்ட மசோதா அமெ​ரிக்க நாடா​ளு​மன்​றத்​தில் நிறை​வேற்​றப்​பட்​டது. 17 பேர் உயி​ரி​ழக்​கக் கார​ண​மான அந்த பள்​ளித் தாக்​கு​தல் அமெ​ரிக்​கா​வில் அதிர்ச்சி அலையை ஏற்​ப​டுத்​தி​யுள்​ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com