வயது முதிர்வின் காரணமாக உலகின் கடைசி வெள்ளை ஆண் காண்டாமிருகம் 'சூடான்' உயிரிழப்பு! 

உலகின் கடைசி வெள்ளை ஆண் காண்டாமிருகமான 'சூடான்' வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது முதிர்வின் காரணமாக உலகின் கடைசி வெள்ளை ஆண் காண்டாமிருகம் 'சூடான்' உயிரிழப்பு! 

நைரோபி: உலகின் கடைசி வெள்ளை ஆண் காண்டாமிருகமான 'சூடான்' வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் சுமத்ரா காண்டாமிருகம், இந்திய காண்டாமிருகம், ஜாவா காண்டாமிருகம், கருப்பு காண்டாமிருகம் மற்றும் வெள்ளை காண்டாமிருகம் என ஐந்து வகையான காண்டாமிருகங்கள் உள்ளன. அவற்றை பொறுத்த வரை பொதுவாகவே வயது உயர்வு அல்லது உடல்நலக்குறைவு காரணமாக மட்டுமே உயிரிழக்கும். இவைகளுக்கு முக்கிய எதிரி என்பது மனிதன் மட்டும்தான்.

ஆனால் ஆப்பிரிக்காவில் அதிகரித்துவரும் வேட்டையின் காரணமாக காண்டாமிருகங்களின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் குறைந்து வருகிறது. இந்தியாவின் காண்டாமிருகங்கள் அதிகமாகி காணப்படும் வடகிழக்கு மாநிலமான அசாமில் கூட காண்டாமிருகங்கள் அதன் கொம்புக்காக வேட்டையாடப்படும் சூழ்நிலைதான் நிலவுகிறது. 

இந்நிலையில் உலகின் கடைசி வெள்ளை ஆண் காண்டாமிருகமான 'சூடான்' வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்ததாக தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் தற்பொழுது வடக்குப் பகுதி வெள்ளை காண்டா மிருகங்கள் மூன்றே மூன்று மட்டும்தான் உள்ளது. அவற்றுள் ஒரே ஆணான 'சூடான்' கிழக்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் கென்யாவின் 'ஒல் பெஜெட்டா' என்னும் விலங்குகள் காப்பகத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பராமரிக்கப்பட்டு வந்ததது. வேட்டைக்காரர்களின் துப்பாக்கிகு சூடான் பலியாகி விட்டால் இந்தப் பூமியில் இனி இந்த இனமே இருக்காது என்ற நிலை.

இப்போது அங்கிருந்த கடைசி வடக்கு வெள்ளை ஆண் காண்டாமிருகம் உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. வயது முத்துவின் காரணமாக காண்டாமிருகம் உயிரிழந்தது என ஆய்வாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக ஒல் பெஜெட்டா விலங்குகள் காப்பகம் தரப்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

45 வயதாகும் சூடானால் எழுந்து நிற்ககூட முடியவில்லை. மிகவும் நோய்வாய்ப்பட்டு பலவினமாக காணப்பட்டது.  அதன் சதைகள், எலும்புகள் சிதைந்தது. அதனுடைய தோல் பகுதியில் பெரும் காயங்கள் ஏற்பட்டது. அதன் காரணமாக சூடான் மரணமடைந்தது

எதிர்காலத்தில் செயற்கை முறையில் பெண் காண்டாமிருகம் மூலமாக இனப்பெருக்கத்தை உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com