செல்ஃபோனைத் தேடும் போது தியேட்டர் இருக்கையினடியில் தலை சிக்கி, மீள முடியாமல் இளைஞர் மரணம்!

அடிக்கடி சினிமா தியேட்டருக்குப் போறவங்களா நீங்க? அப்போ இந்தச் செய்தியைப் படிச்சிட்டு இனிமேல் கொஞ்சம் உஷாராகிடுங்க.
செல்ஃபோனைத் தேடும் போது தியேட்டர் இருக்கையினடியில் தலை சிக்கி, மீள முடியாமல் இளைஞர் மரணம்!

அடிக்கடி சினிமா தியேட்டருக்குப் போறவங்களா நீங்க? அப்போ இந்தச் செய்தியைப் படிச்சிட்டு இனிமேல் கொஞ்சம் உஷாராகிடுங்க.

ஏனெனில், நம்மூர் மல்ட்டிஃப்ளெக்ஸ் தியேட்டர்களிலும் இருக்கை அமைப்புகள் இப்போதெல்லாம் மேலை நாடுகளில் உள்ளதைப் போலத்தான் வடிவமைக்கப் பட்டிருக்கின்றன. அதனால் சந்தர்ப்ப வசத்தில் இருக்கைகளுக்கு இடையில் ஏதாவது மாட்டிக் கொண்டால் உடனடியாக அதை மீட்பது கஷ்டம். இங்கே ஒரு மனிதர் தனது உயிரையே பறிகொடுத்திருக்கிறார் என்று தெரிய வருகையில் சோகமாகத்தான் இருக்கிறது.

வாஷிங்டன்: பிர்மிங்ஹாம், ஸ்டார் சிட்டி பொழுதுபோக்கு காம்ப்ளெக்ஸில் இருக்கும் வியூ சினிமா எனும்  தியேட்டர் ஒன்றில் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவரது மொபைல் ஃபோன் கீழே விழுந்திருக்கிறது. தியேட்டர் இருட்டில் கீழே விழுந்த மொபைலைத் தேடி அவர் இருக்கையினடியில் குனிந்து தேடலில் ஈடுபட்டிருக்கிறார். மொபைல் கிடைத்ததோ இல்லையோ, இளைஞரது தலை இருக்கையினடியில் மாட்டிக் கொண்டது. அவர் எத்தனை முயற்சித்தும் இருக்கையினடியில் இருந்து தனது தலையை வெளியில் எடுக்க முடியவில்லை. தியேட்டரின் இருக்கைகள் அனைத்தும் எளிதில் உடைக்க முடியாத வகையிலான மெட்டீரியலால் தயாரிக்கப்பட்டதாக இருந்ததால் இருக்கையை உடைத்து அவரை மீட்பதும் கடினமாக இருந்திருக்கிறது. இப்படியொரு விந்தையான விபத்தில் இளைஞர் சிக்கிக் கொண்ட போது அவருடன் அமர்ந்து படம் பார்த்துக் கொண்டிருந்தவரான அவரது நண்பரும், வியூ சினிமா அலுவலருமான நபர், தனது நண்பரை மீட்கக் கடைசி வரை போராடியிருக்கிறார். ஆனால் தொடர்ந்து இருக்கைக்கு அடியில் காற்றோட்டமும், வெளிச்சமும் அற்ற நிலையில் தலையை வெளியில் இழுத்துக் கொள்ள முடியாமல் போராடிக் கொண்டிருந்ததில் விபத்தில் சிக்கிய நபருக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டிருக்கிறது. ஒருவழியாக அவரை மீட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதும் ஒரு வாரம் கழிந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்திருக்கிறார்.

தற்போது வியூ சினிமா தியேட்டர் விபத்து குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். தியேட்டர் இருக்கையில் தலை சிக்கி உயிரிழப்பு நிகழ்வதெல்லாம் மிகவும் மோசமான மரணம். இப்படியான விபத்துக்கள் எதிர்காலத்தில் நிகழாமல் இருக்க, இந்த விபத்து எவ்விதம் நிகழ்ந்திருக்க முடியும் என்பதைக் கண்டறியும் விதத்தில் விசாரணை துரிதப்படுத்தப் பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com