இலங்கை அமைச்சரவை 4-ஆவது முறையாக மாற்றியமைப்பு

இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறீசேனா தனது அமைச்சரவையை நான்காவது முறைûயாக செவ்வாய்க்கிழமை மாற்றியமைத்தார். 
இலங்கை அமைச்சரவை 4-ஆவது முறையாக மாற்றியமைப்பு

இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறீசேனா தனது அமைச்சரவையை நான்காவது முறைûயாக செவ்வாய்க்கிழமை மாற்றியமைத்தார். 
இலங்கையில் கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் மைத்ரிபாலா சிறீசேனாவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி கட்சியும், ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து ஆட்சியமைத்தன. வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த தேர்தலில் முன்னாள் அதிபர் ராஜபட்சே தோற்கடிக்கப்பட்டார்.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ராஜபட்சேவின் இலங்கை மக்கள் முன்னணி, மொத்தமுள்ள 340 இடங்களில் 225 இடங்களில் வெற்றிபெற்றது. சிறீசேனாவின் கட்சியும், விக்கிரமசிங்கவின் கட்சியும் படு தோல்வியை சந்தித்தன.
இந்த நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வரப்பட்டது. இதில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு எதிராக 6 கேபினட் அமைச்சர்கள் வாக்களித்தனர்.
இதன் எதிரொலியாக , அவர்கள் அனைவரும் கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி தங்களது அமைச்சர் பதவிகளை ராஜிநாமா செய்தனர். அவர்களின் ராஜிநாமாவையடுத்து, தாற்காலிகமாக நான்கு கேபினட் அமைச்சர்கள் அதிபர் முன்னிலையில் அன்றே பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்த நிலையில், அதிபர் சிறீசேனா நான்காவது முறையாக தனது அமைச்சரவையை மாற்றியமைத்துள்ளார். இதில், 18 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு ஆகஸ்டில் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் நீதிபதி விஜேயதாசா ராஜபக்ஷேவுக்கு தற்போதைய அமைச்சரவை மாற்றத்தில் உயர்கல்வி மற்றும் கலாசார விவகாரத்துறை வழங்கப்பட்டுள்ளது. முன்பு இந்த பொறுப்பில் இருந்த கபீர் ஹசீம் தற்போது நெடுஞ்சாலை மற்றும் சாலை மேம்பாட்டுத் துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நீதித் துறை மற்றும் சிறை சீர்திருத்த துறை அமைச்சராக தலதா அதுகொரலா பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
இலங்கை ராணுவத்தின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகா ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த அமைச்சரவை மாற்றத்தில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி வசமிருந்த சமூக அதிகாரமளித்தல் மற்றும் தொழிலாளர் நலத்துறை இலாக்காக்கள் தற்போது ஐக்கிய தேசிய கட்சியின் வசமாகியுள்ளது. அந்தக் கட்சியைச் சேர்ந்த பி. ஹாரிசன் சமூக அதிகாரமளித்தல் துறை அமைச்சராகவும், ரவீந்திரா சமரவீரா தொழிலாளர் நலத் துறை அமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டுள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கூட்டணி படு தோல்வியை சந்தித்ததையடுத்து நாடாளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டும் என எதிர்கட்சிகள் கூறி வருகின்றன. ஆனால், இலங்கையின் அரசமைப்புச் சட்டப்படி 2020 பிப்ரவரிக்கு முன்னதாக தேர்தலை நடத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com