உங்களது 'ருசியான மனைவி': ஆஸ்திரேலிய பிரதமரை சங்கடப்படுத்திய பிரெஞ்சு அதிபரின் ஆங்கிலம் 

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் செய்து வரும் பிரெஞ்சு அதிபர் மேக்ரோன் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல்லின் மனைவியை 'ருசியானவர் என்று வர்ணித்தது சர்ச்சையாகியிருக்கிறது 
உங்களது 'ருசியான மனைவி': ஆஸ்திரேலிய பிரதமரை சங்கடப்படுத்திய பிரெஞ்சு அதிபரின் ஆங்கிலம் 

சிட்னி: ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் செய்து வரும் பிரெஞ்சு அதிபர் மேக்ரோன் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல்லின் மனைவியை 'ருசியானவர் என்று வர்ணித்தது சர்ச்சையாகியிருக்கிறது 

பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் மூன்றுநாள் அரசு முறைப்பயணமாக ஆஸ்திரேலியா வந்துள்ளார். அவரது பயணத்தில் பாதுகாப்பு மற்றும் பருவ நிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்தை நடக்க உள்ளது.

இந்நிலையில் மேக்ரோன் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல்லின் மனைவியை 'ருசியானவர் என்று வர்ணித்தது சர்ச்சையாகியிருக்கிறது.

சம்பிரதாய விருந்துக்குப் பிறகு சிட்னியில் உள்ள கிர்பி மாளிகையில் மேக்ரோன் மற்றும் டர்ன்புல் இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்பொழுது ‘இனிமையான வரவேற்பிக்காக உங்களுக்கும் உங்களது ருசியான மனைவிக்கும் நன்றி’ என்று மேக்ரோன்  ஆங்கிலத்தில் தெரிவித்தார்.

மால்கம் டர்ன்புல் உடனடியாக அதனை பெரிதாகக் கருதாமல் மேக்ரோனுக்கு சிரித்து கைகொடுத்து கடந்து விட்டார். ஆனால் அது சமூக வலைத்தளங்களில் இந்த விவகாரம் பரவலாக விவாதிக்கப்படுகிறது.

மேக்ரோன் சிறந்த அல்லது மகிழ்ச்சி என்னும் பொருள்படும் மற்றொரு பிரெஞ்சு வார்த்தைக்குப் பதிலாக 'டிலீசியஸ்' என்னும் ஆங்கில வார்த்தையினைப் பயன்படுத்தி விட்டார் என்று ஒரு தரப்பினர் கூறுகிறார்கள். ஆனாலும் மேக்ரோன் சிறந்த ஆங்கிலப் புலமை உள்ளவர் என்பதற்கு கடந்த வாரம் அமெரிக்க உறுப்பினர்கள் சபையில் அவர் ஆற்றிய உரையே சான்று என்று எதிர் தரப்பும் பதிலளித்து வருகிறது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com