மெர்க்கலுடனான கல்யாணத்தை நிறுத்துங்கள்: இங்கிலாந்து இளவரசர் ஹாரிக்கு மெர்க்கலின் மைத்துனர் கடிதம்  

நடிகை மேகன் மெர்க்கலுடனான திருமணத்தை உடனே நிறுத்துங்கள் என இளவரசர் ஹாரிக்கு மெர்க்கலின்  சகோதரர் கடிதம் எழுதியுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
மெர்க்கலுடனான கல்யாணத்தை நிறுத்துங்கள்: இங்கிலாந்து இளவரசர் ஹாரிக்கு மெர்க்கலின் மைத்துனர் கடிதம்  

லண்டன்: நடிகை மேகன் மெர்க்கலுடனான திருமணத்தை உடனே நிறுத்துங்கள் என இளவரசர் ஹாரிக்கு மெர்க்கலின்  சகோதரர் கடிதம் எழுதியுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

இங்கிலாந்து இளவரசர் சாரல்ஸின் இரண்டாவது மகன் ஹாரி. அவருக்கும் நடிகையான மேகன் மெர்க்கலுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திருமணம் ஆகி விவகாரத்து செய்யப்பட்டவரான மெர்க்கல் இளவரசர் ஹாரியை திருமணம் செய்து கொள்ள உள்ளார் என்ற தகவல் வெளியான நாளில் இருந்து, மெர்க்கலின் குடும்பத்தார் இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மே 19 அன்று இவர்களுக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டு திருமண ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் நடிகை மேகன் மெர்க்கலுடனான திருமணத்தை உடனே நிறுத்துங்கள் என இளவரசர் ஹாரிக்கு மெர்க்கலின் ஒன்று விட்ட சகோதரர் தாமஸ் கடிதம் எழுதியுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

இதுதொடர்பாக ஹாரிக்கு தாமஸ் எழுதியுள்ள கடிதத்தில் மெர்க்கல் பற்றிய விமர்சனங்கள் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளன. அதில் அவர் கூறியுள்ளதாவது:

அன்புள்ள இளவரசர் ஹாரி, இப்பொழுதும் ஒன்றும் தாமதமில்லை. நடக்கவிருக்கும் உங்களது திருமணத்தை நிறுத்திவிடுங்கள். மெர்க்கல் வாழ்க்கையில் ஆழமில்லாத பிடிப்பு அற்ற ஒரு பெண் ஆவாள். மேலும் அதிகமாக கற்பனையில் மூழ்கித் திளைப்பவள்.

அவளைப் பற்றி உலகமே அறிந்து வைத்திருக்கும் நிலையில் நீங்கள் மட்டும் ஏன் மெர்க்கலின் சுயரூபத்தை அறிந்து கொள்ளாமல் இருக்கிறீர்கள் என்பது புரியவில்லை.  அவள் உங்களுக்கு சற்றும் பொருத்தமில்லாதவள். இந்த திருமணம் நடந்தால் அது இங்கிலாந்து அரச குடும்ப திருமண வரலாற்றில் மிகப்பெரிய தவறாக மாறி விடும்.

இவ்வாறு தாமஸ் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com