இராக் தேர்தல்: ஷியா தலைவர் சாதர் முன்னிலை

இராக்கில் சனிக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஷியா பிரிவினரிடையே செல்வாக்கு மிக்க தலைவர் முக்தாதா அல்-சாதர் தலைமையிலான கூட்டணி முன்னிலை வகித்து வருவதாக தகவல்கள்
not
not

இராக்கில் சனிக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஷியா பிரிவினரிடையே செல்வாக்கு மிக்க தலைவர் முக்தாதா அல்-சாதர் தலைமையிலான கூட்டணி முன்னிலை வகித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போராடிய ஈரான் ஆதரவு முன்னாள் படையினரின் அரசியல் கூட்டணி, அல்-சாதர் கூட்டணிக்கு அடுத்த நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
வாக்கு எண்ணிக்கை முடிவடையும் வரையிலும் இதே நிலை நீடித்தால், தற்போதைய அதிபர் அல்-அபாதிக்கும், ஷியா பிரிவு தலைவர் அல்-சாதருக்கும் இடையே அடுத்த அதிபர் பதவிக்காக மிகக் கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இராக்கில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்ட பிறகு, அந்த நாட்டின் நாடாளுமன்றத்துக்கு முதல் முறையாக சனிக்கிழமை தேர்தல் நடைபெற்றது.
அண்மைக் காலமாக பயங்கரவாதத் தாக்குதல்களின் எண்ணிக்கையும், தீவிரமும் வெகுவாகக் குறைந்துள்ள நிலையிலும், ஐ.எஸ். உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் இந்தத் தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்ததால், பலத்த பாதுகாப்புக்கிடையே இந்தத் தேர்தல் நடைபெற்றது.
அதிபர் ஹைதர் அல்-அபாதி, முன்னாள் அதிபர் நூரி அல்-மாலிக்கி, முன்னாள் ஷியா ஆயுதப் படையின் தலைவரான முக்தாதா அல்-சாதர் ஆகியோர் தேர்தலில் போட்டியிட்டனர். 
தனது ஆட்சியின் கீழ் ஐ.எஸ். பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டதை சாதனையாகக் கூறி மக்களிடையே அல்-அபாதி ஆதரவு திரட்டினார்.
ஷியாக்களிடையே செல்வாக்கு பெற்ற அல்-சாதர், சீர்திருத்தங்களையும், ஊழல் ஒழிப்பையும் முன்வைத்து தேர்தலை எதிர்கொண்டார்.
இந்த நிலையில், அவரது தலைமையிலான கூட்டணி தேர்தலில் முன்னிலை வகிப்பதாக முதல் கட்ட வாக்கு எண்ணிக்கையில் தெரிய வந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com