தூதரக மாற்றத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்: 41 பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் படையினரால் சுட்டுக் கொலை

ஜெருசலேம் நகருக்கு அமெரிக்க தூதரகம் மாற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காஸா எல்லையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாலஸ்தீனர் 41 பேர் இஸ்ரேல் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

முஸ்லீம் நாடுகளின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, அமெரிக்கத் தூதரகம் சர்ச்சைக்குரிய ஜெருசலேமுக்கு மாற்றப்பட்டதைக் கண்டித்து ஆயிரணக்கான பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் எல்லை அருகே தீவிர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது டயர்களை கொளுத்தியும், பெட்ரோல் குண்டுகளை வீசியும் (படம்) அவர்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். அவர்களை கலைக்க, இஸ்ரேல் படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
இந்த மோதலில், 41 பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். தங்கள்மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் துப்பாக்கியால் சுட்டு, வெடிகுண்டு வீச வந்ததாகவும், அவர்களைத் தடுக்கும் வகையில் திருப்பிச் சுட்டதாகவும் இஸ்ரேல் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு, ஈரான் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com