முதலில் அமெரிக்கா; அடுத்து கவுதமாலா: இஸ்ரேலில் திறக்கப்பட்ட தூதரகம் 

அமெரிக்காவை அடுத்து கவுதமாலா நாடும் இஸ்ரேலுக்கான தனது தூதரகத்தினை ஜெருசலேம் நகரில் புதன்கிழமை அன்று திறந்துள்ளது
முதலில் அமெரிக்கா; அடுத்து கவுதமாலா: இஸ்ரேலில் திறக்கப்பட்ட தூதரகம் 

ஜெருசலேம்: அமெரிக்காவை அடுத்து கவுதமாலா நாடும் இஸ்ரேலுக்கான தனது தூதரகத்தினை ஜெருசலேம் நகரில் புதன்கிழமை அன்று திறந்துள்ளது

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சமீபத்தில் டெல் அவிவ் நகரில் இருந்த இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதரகத்தினை ஜெருசலேம் நகருக்கு இடமாற்றினார்.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பாலஸ்தீனர்கள் கடும் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து இஸ்ரேலுக்கு எதிராக காசா எல்லையை நோக்கி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அவர்களை கட்டுப்படுத்த இஸ்ரேல் ராணுவம் கடும் துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் 59 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.  2,400 பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில் அமெரிக்காவை அடுத்து கவுதமாலா நாடும் இஸ்ரேலுக்கான தனது தூதரகத்தினை ஜெருசலேம் நகரில் புதன்கிழமை அன்று திறந்துள்ளது

இதற்கான தொடக்க நிகழ்ச்சி புதனன்று ஜெருசலேமில் நடைபெற்றது. இந்நிகழவில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு மற்றும் கவுதமாலா அதிபர் ஜிம்மி மொரேல்ஸ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com