இளவரசர் ஹாரியை கரம் பிடித்தார் மேகன்

பிரிட்டன் இளவரசர் ஹாரி - மேகன் மார்கல் திருமணம், பிரிட்டனின் விண்ட்ஸார் கோட்டையில் சனிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.
காரில் வரும் மணமகளை உற்சாகமாக வரவேற்கும் மக்கள் கூட்டம்.
காரில் வரும் மணமகளை உற்சாகமாக வரவேற்கும் மக்கள் கூட்டம்.

பிரிட்டன் இளவரசர் ஹாரி - மேகன் மார்கல் திருமணம், பிரிட்டனின் விண்ட்ஸார் கோட்டையில் சனிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.
பிரிட்டன் இளவரசர் சார்லஸ் - டயானா தம்பதியரின் கடைசி மகனும், இளவரசருமான ஹாரி (33), அமெரிக்காவைச் சேர்ந்த சமூக சேவகரும், நடிகையுமான மேகன் மார்கல் (36) ஆகிய இருவருக்கும், அந்த நாட்டின் விண்ட்ஸார் நகரக் கோட்டையில் அமைந்துள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் சனிக்கிழமை கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.
உடல் நலக் குறைவு காரணமாக மார்கலின் தந்தை இந்தத் திருமணத்தில் பங்கேற்க முடியாததால், மணமகன் மட்டுமின்றி மணமகளின் தந்தை ஸ்தானத்தையும் இளவரசர் சார்லஸ் இத்திருமணத்தில் ஏற்றுக் கொண்டார்.
இந்தத் திருமணம் அரசு நிகழ்ச்சி இல்லை என்பதால், பிரிட்டன் பிரதமர் தெரசா மே, எதிக்கட்சித் தலைவர் ஜெரமி கார்பின் உள்ளிட்ட உள்நாட்டுத் தலைவர்களுக்கும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போன்ற சர்வதேச தலைவர்களுக்கும் கூட அழைப்பு விடுக்கப்படவில்லை.
எனினும், சமூகப் பணிகளுக்காக அறியப்படும் சுமார் 1,200 பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
பிரிட்டன் பிரதமர் தெரசா மே, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் சுட்டுரை (டுவிட்டர்) வலைதளம் மூலம் ஹாரி-மேகன் தம்பதியருக்கு தங்களது திருமண வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com