கியூபா விமான விபத்து: 104 பேர் பலி?

கியூபா தலைநகர் ஹவானா விமான நிலையத்திலிருந்து 104 பயணிகளுடன் வெள்ளிக்கிழமை புறப்பட்ட விமானம் சில நிமிடங்களில் தரையில் விழுந்து நொறுங்கியது.

கியூபா தலைநகர் ஹவானா விமான நிலையத்திலிருந்து 104 பயணிகளுடன் வெள்ளிக்கிழமை புறப்பட்ட விமானம் சில நிமிடங்களில் தரையில் விழுந்து நொறுங்கியது.
உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது. கியூபா அரசுக்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் 104 பயணிகளுடன் கியூபாவிலிருந்து ஹோல்கைன் நகருக்கு புறப்பட்டுச் சென்றது. விமானம் உயரே எழும்பிய சில நிமிடங்களில் விமான நிலையத்துக்கு அருகே உள்ள பகுதியில் கீழே விழுந்து நொறுங்கியது. இதையடுத்து, அந்தப் பகுதி முழுவதும் பெரும் புகை உண்டாது. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விபத்து நடந்த இடத்தை கியூபா அதிபர் மிகேல் தியாஸ் கேனல் நேரில் ஆய்வு செய்தார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், 'இந்த விபத்து துரதிருஷ்டவசமானதாகும். இறந்தவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும் என்று தெரிகிறது' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com