டெக்ஸாஸ் பள்ளியில் துப்பாக்கிச் சூடு: மாணவர்கள் உள்பட 10 பேர் பலி

அமெரிக்காவின் டெக்ஸாஸ் நகரில் உள்ள பள்ளியில் மாணவர் ஒருவர் திடீரென கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் சக மாணவர்கள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். ஹூஸ்டன் நகரில்

அமெரிக்காவின் டெக்ஸாஸ் நகரில் உள்ள பள்ளியில் மாணவர் ஒருவர் திடீரென கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் சக மாணவர்கள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். ஹூஸ்டன் நகரில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள சாந்தா ஃபெ உயர் நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை இந்த கொடூரத் தாக்குதல் நடைபெற்றது. இதுதொடர்பாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களும் மாணவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
ஹூஸ்டன் கிரானிக்கள் செய்தித்தாளில் வெளியான செய்தியில், 'அந்த பள்ளியில் திடீரென மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மாணவர்கள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூட்டில் அரசு அதிகாரி ஒருவரும் காயமடைந்தார். தகவல் கிடைத்ததும் அந்தப் பள்ளிக்கு ராணுவ அதிகாரிகள் விரைந்து வந்தனர். 2 பேரை கைது செய்துள்ளனர். அவர்களும் மாணவர்கள் என்று தெரியவந்துள்ளது. இந்தத் தாக்குதலில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்' என்று அந்தச் செய்தித்தாளில் அதிகாரி ஒருவர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கடந்த 7 நாள்களில் பள்ளிகளில் மட்டும் நடைபெற்ற 3-ஆவது துப்பாக்கிச் சூடு சம்பவம் இதுவாகும். இந்த ஆண்டில் இதுவரை 22 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அந்நாட்டு பள்ளிகளில் நடைபெற்றுள்ளன.
இந்தச் சம்பவத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இரங்கல் தெரிவித்தார்.
பள்ளி மாணவர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com