நேபாள கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒருங்கிணைப்பு: சீனா வரவேற்பு

நேபாள கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒருங்கிணைப்பு: சீனா வரவேற்பு

நேபாளத்தில் இரு பெரிய கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஒருங்கிணைக்கப்பட்டதை சீனா வரவேற்றுள்ளது.

நேபாளத்தில் இரு பெரிய கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஒருங்கிணைக்கப்பட்டதை சீனா வரவேற்றுள்ளது.
இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் லூ காங் பெய்ஜிங்கில் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
சீனாவின் மிகச் சிறந்த அண்டை நாடு என்ற முறையில், நேபாளத்தின் சமூக அமைப்பையும், வளர்ச்சியையும் நல்ல பாதைக்கு இட்டுச் செல்லும் வகையில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஒருங்கிணைக்கப்பட்டதை வரவேற்கிறோம்.
இந்த முடிவை, நேபாளம் தன்னிச்சையாக எடுத்துள்ளது என்றார் அவர்.
நேபாளத்தின் ஐக்கிய மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஎன்-யுஎம்எல்), நேபாள மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய இரு கட்சிகளும் ஒருங்கிணைப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.
இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஒருங்கிணைக்கப்பட்டு, புதிதாக உருவாகியுள்ள கட்சி தற்போது நேபாளத்தின் மிகப் பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com