விடுதலைப் புலிகள் சித்தாந்தத்தை வீழ்த்த மக்களின் ஆதரவு தேவை

விடுதலை புலிகள் அமைப்பின் சித்தாந்தத்தை வீழ்த்த பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா வலியுறுத்தினார்.
விடுதலைப் புலிகள் சித்தாந்தத்தை வீழ்த்த மக்களின் ஆதரவு தேவை

விடுதலை புலிகள் அமைப்பின் சித்தாந்தத்தை வீழ்த்த பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா வலியுறுத்தினார்.
இலங்கையில் 30 ஆண்டுகளாக நீடித்துவந்த உள்நாட்டுப் போர் கடந்த 2009-ஆம் ஆண்டு மே 18-ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. அப்போது, இலங்கை முன்னாள் அதிபர் ராஜபட்ச அரசு ஆட்சியின்போது, விடுதலை புலிகள் அமைப்பு போரில் வீழ்த்தப்பட்டது.
இதன் 9-ஆம் ஆண்டு நினைவு தினம், அந்நாட்டுத் தலைநகர் கொழும்பில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்று அதிபர் சிறீசேனா கூறியதாவது:
உள்நாட்டுப் போரில் விடுதலை புலிகள் அமைப்பை வீழ்த்திவிட்டோம். ஆனால், அதன் சித்தாந்தமும், அந்த அமைப்பு க்கு மீண்டும் புத்துயிர் அளிக்க முயற்சிப்பவர்களும் அரசுக்கு கடும் சவாலாக இருந்து வருகின்றனர்.
லண்டனுக்கு நான் சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது, அங்கு விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் சிலர் எனக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எனவே, விடுதலைப் புலிகளின் சித்தாந்தத்தை வீழ்த்த இலங்கை மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று சிறீசேனா பேசினார்.
தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இலங்கையின் வடமாகாணத்தில் போரில் உயிரிழந்த தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இறுதிப் போர் நடைபெற்ற முல்லிவாய்க்காலில் சுமார் 5ஆயிரம் பேர் நினைவுதினத்தில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com