ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு கூடுதல் அதிகாரம்: பாகிஸ்தான் அரசு முடிவு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், கில்ஜித்-பல்டிஸ்தான் ஆகியவற்றுக்கு கூடுதல் அதிகாரத்தையும்,நிதியுதவியையும் அளிப்பதற்கு பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், கில்ஜித்-பல்டிஸ்தான் ஆகியவற்றுக்கு கூடுதல் அதிகாரத்தையும்,நிதியுதவியையும் அளிப்பதற்கு பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.
பாகிஸ்தானில் தேசிய பாதுகாப்புக் குழு (என்எஸ்சி) கூட்டம், பிரதமர் ஷாகித் ககான் அப்பாஸி தலைமையில் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திட்டக் குழுவின் துணைத் தலைவர் சர்தாஜ் அஜீஸ், உள்துறை அமைச்சர் அஷன் இக்பால், பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் குர்ரம் தஸ்தகீர் கான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், கில்ஜித்-பல்டிஸ்தான் அரசுகளுக்கு கூடுதலாக நிதி, நிர்வாக அதிகாரத்தை வழங்குவது என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. எனினும், கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பரிந்துரைகள் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.
எனினும், பாகிஸ்தானின் இதர பகுதிகளைப் போன்று கில்ஜித்-பல்டிஸ்தானும் வளர்ச்சி அடைவதற்காக, அந்தப் பகுதிக்கு 5 ஆண்டுகளுக்கு வரி விலக்கு அளிப்பற்கு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பாகிஸ்தானில் பலூசிஸ்தான், கைபர்-பக்துன்கவா, பஞ்சாப், சிந்து ஆகிய 4 மாகாணங்கள் உள்ளன. கில்ஜித்- பல்டிஸ்தானை தனி பிராந்தியமாக பாகிஸ்தான் கருதி வருகிறது.
கில்ஜித்-பல்டிஸ்தானை தனி பிராந்தியமாகவும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை 5-ஆவது மாகாணமாகவும் பாகிஸ்தான் அறிவிக்கக் கூடாது என்று இந்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும், பாகிஸ்தான்-சீனா இடையேயான பொருளாதார வழித்தடத்தை கில்ஜித்-பல்டிஸ்தான் வழியாக சீனா கொண்டு செல்வதற்கும் இந்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இதனிடையே, கைபர் பக்துன்கவாவுடன் ஒன்றிய பழங்குடிகள் பகுதிகளை இணைப்பதற்கும் தேசிய பாதுகாப்புக் குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com