வட கொரியா செல்கிறார் ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர்

ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் வடகொரியாவுக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர்
ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர்

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அடுத்த மாதம் சிங்கப்பூரில் சந்திக்கவுள்ளனர். இந்த சந்திப்புக்கு முன்பாக ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் வடகொரியாவுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின. 

இதுகுறித்து கொரிய செய்தி நிறுவனம் கூறுகையில், தேதி குறிப்பிடாமல் வடகொரியா வெளியுறவுத் துறை அமைச்சர் ரி யோங்-ஹோவின் அழைப்பை ஏற்று பியாங்யங்குக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்று தெரிவித்திருந்தது. 

இதே செய்தியை ரஷிய செய்தி நிறுவனம் கூறுகையில், ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் வியாழக்கிழமை வடகொரியாவுக்கு செல்ல இருக்கிறார் என்று வெளியிட்டுள்ளது. 

கடந்த மாதம் வடகொரிய வெளியுறவுத் துறை அமைச்சர் ரஷிய தலைநகர் மாஸ்கோவுக்கு சென்று இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேசினார். இந்த சந்திப்பின் நீட்சியாக தற்போது இந்த பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, 

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், அமெரிக்க அதிபர் டிரம்ப் இருவரும் சிங்கப்பூரில் ஜூன் 12-ஆம் தேதி சந்திக்க திட்டமிடப்பட்டிருந்தது. இதையடுத்து, அணு ஆயுத அழிப்பது குறித்து தொடர்ந்து அமெரிக்கா கருத்து தெரிவித்து வந்தால் டிரம்புடனான சந்திப்பு ரத்து செய்யப்படலாம் என வடகொரிய வட்டாரங்கள் அச்சுறுத்தி வந்தன. 

பின்னர், வடகொரி்யாவில் உள்ள அணு ஆயுத கூடங்கள் அனைத்தையும் அந்நாடு அழித்தது. இந்த நிகழ்வு நடைபெற்ற உடனேயே கிம் ஜாங் உடனான சந்திப்பை ரத்து செய்வதாக டிரம்ப் அறிவித்தார். 

அதன்பிறகு இந்த சந்திப்பை மீண்டும் நடத்த வடகொரியா முற்பட்டது. இதையேற்ற அமெரிக்கா, வடகொரிய அதிகாரிகள் அமெரிக்காவுக்கு வருகை தந்து செயலாளரிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறியது. இதையேற்று, வடகொரிய துணை தலைவர் அமெரிக்க செயலாளர் மைக் போம்பியோவை நியூயார்கில் சந்திக்கிறார். 

இதையடுத்து, அணு ஆயுதமில்லாத தீபகற்பத்துக்காக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தடையான டிரம்ப் சந்திப்பை மீண்டும் ஏற்பாடு செய்வதற்கு ஆர்வம் காட்டி வருகிறார் என்று தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் கருத்து தெரிவித்தார்.   

இந்த நிலையில், கிம் ஜான் உன், டிரம்ப் சந்திப்பு நடைபெறுவதற்கு முன்பாக ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் வட கொரியாவுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com