இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளுக்கு ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா தற்காலிக விலக்கு 

இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளுக்கு ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா தற்காலிக விலக்கு அளிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளுக்கு ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா தற்காலிக விலக்கு 

வாஷிங்க்டன்: இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளுக்கு ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா தற்காலிக விலக்கு அளிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணுசக்தி   ஒப்பந்தத்திலிருந்து அந்நாடு விலகியது. அதன் தொடர்ச்சியாக  ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது. ஆனால் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த பிற நாடுகள் ஈரானுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்தன. 

ஈரானுக்கான நிதி ஆதாரங்களை தடை செய்யும் பொருட்டு  இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் நவம்பர் 5-ம் தேதிக்கு பிறகு ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறு கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று டிரம்ப் அரசு மிரட்டல் விடுத்திருந்தது. 

அதேசமயம் அமெரிக்கா மிரட்டியபோதிலும், நவம்பர் 5-ம் தேதிக்கு பிறகும் ஈரானிடமிருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளுக்கு ஈரானில் இருந்து எண்ணெய் வாங்க அமெரிக்கா தற்காலிக விலக்கு அளிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 

இதுதொடர்பான முறையான அறிவிப்பினை அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ விரைவில் அறிவிப்பார் என்று தெரிகிறது. 

சர்வதேச சூழலை கருத்தில் கொண்டு ஈரானிடம் இருந்து இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாக அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும், விலக்கு அளிக்கப்பட்ட நாடுகளும் விரைவில் ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com